Categories: சமையல்

புரத சத்து நிறைந்த வேர்க்கடலை வைத்து சுவையான வேர்க்கடலை பக்கோடா ரெசிபி!

பொதுவாக வேர்க்கலையை ஏழைகளின் பாதாம் என அழைப்பார்கள், பாதாம் பருப்பில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இந்த வேர்க்கடலையிலும் உள்ளது. இப்போது இந்த சுவையான வேர்க்கடலை பக்கோடா ரெசிபி நம்ம வீட்டில் செய்து பார்க்கலாமா..

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்,
அரிசி மாவு – கால் கப்,
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்,
பெரிய வெங்காயம் – 2,
இஞ்சி ,பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி ,
பெருஞ்சீரகம்- மிளகு பொடி – அரை தேக்கரண்டி ,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வேர்க்கடலையை மிக்ஸியில் பரபரவென பொடித்து கொள்ளவும் . மிளகு, பெருஞ்சீரகத்தை எண்ணெய் இல்லாமல் சிறிது வறுத்துப் பொடிக்கவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும் பச்சை வாசனை சென்றதும் , மல்லித்தழை சேர்த்து கலந்து வைக்கவும்.

பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த வேர்க்கடலை, மிளகு – பெருஞ்சீரகம் பொடி, வதக்கிய கலவை, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நீர் தெளித்து பிசைந்து வைக்கவும். தண்ணீர் அதிகமாக தேய்க்க கூடாது.

குழந்தைகளுக்கு மிகவும் சத்தான கேரட் வைத்து மஞ்சூரியன் ரெஸிபி!

வாணிலயில் எண்ணெயை சூடாக்கியதும் , பிசைந்த மாவை சிறிது சிறிதாக்க போட்டுப் பொரித்தெடுக்கவும்.

இப்போது சுவையான வேர்க்கடலை பக்கோடா ரெடி…

Published by
Velmurugan

Recent Posts