தமிழகம்

பீதியை கிளப்பும் பிளாஸ்டிக் மழை: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் மாசடைவது  அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் அமெரிக்கா  கெமிஸ்ட்ரி சொசைட்டி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி, மழைநீரில் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் ஃபார்வர் கெமிக்கல் என அழைக்கப்படும் வேதிப்பொருள் அதிக அளவில் மழை நீரில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இத்தகைய வெடிபொருட்கள் அழகு சாதனம் மற்றும் நான்-ஸ்டிக் பாத்திரங்களில் இயல்பாக இருந்தாலும் அவை மனிதர்கள் பாதுகாப்பாக உட்கொள்ளும் அளவிற்கு இருந்ததாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் தற்போது பொழியும் மழை நீரினை உட்கொள்ளும் தன்மையானது பாதுகாப்பான அளவை மீறி அபாயக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்நிலையில் 1950-களில் இருந்ததை விட உலகம் முழுவதும் ரசாயன உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிப்பதே இதற்கு காரணம் என கூறும் விஞ்ஞானிகள் 2050 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
Revathi

Recent Posts