நினைவோ ஒரு பறவை பாடல் இப்படித்தான் உருவாச்சா? கமல் – ஜானகி கூட்டணியில் உருவான முதல் பாடல்

உலக நாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. புதுமுக இயக்குநர்கள் அல்லது புதிய வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவோர் என அனைவருமே கமல்ஹாசனின் பாதிப்பு இன்றி சினிமாத் துறையில் அடியெடுத்து வைக்க முடியாது.

அந்த அளவிற்கு நடிப்பு, இயக்கம், பாடல், திரைக்கதை, தொழில்நுட்பம் என அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார். சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால் ஒவ்வொரு முறையும் தனது படங்களில் சோதனை முயற்சியை மேற்கொண்டு வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப் படாமல் தான் சம்பாதித்தவற்றை மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்து பல சாதனைகளைச் செய்தவர்.

இப்படித்தான் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாகவும், பின் நடன இயக்குநராகவும், அதன்பின் வாலிபனான பின்பு ஜெமினிகணேசன் மூலம் பாலச்சந்தரின் கண்களில் பட்டு இன்று உலகநாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் திரையில் முதன் முதலாக பின்னணி பாடிய பாடல் ‘ஞாயிறு ஒளிமழையில்..’ என்ற பாடலாகும். இடம்பெற்ற படம் அந்தரங்கம். இசையமைத்தவர் தேவராஜன். இப்படி முதன்முதலாக பின்னணி பாட ஆரம்பித்தவர் இன்றுவரை பாடி வருகிறார். கடைசியாக ‘விக்ரம்’ படத்தில் ‘பத்தல.. பத்தல..’ பாடலைப் பாடியிருந்தார்.

சிவக்குமாரின் நல்ல மனதினை மனம்திறந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்.. இப்போதுள்ள அகரம் பவுண்டேஷனுக்கு அப்பவே அச்சாரம் போட்ட நிகழ்வு

கமல்ஹாசனும், எஸ்.ஜானகியும் பல பாடல்களை இணைது பாடியுள்ளனர். இவர்கள் முதன்முதலாக இணைந்த பாடல் தான் சிவப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற ‘நினைவோ ஒரு பறவை..’ பாடல். அப்போது சினி எக்ஸ்பிரஸ் விழா மேடையில் ஏதாவது வித்யாசமாக செய்து காட்டுங்கள் என்று கேட்க, கமல்ஹாசன் One is the Lonliest Number என்ற ஆங்கிலப் பாடலைப் பாடியிருக்கிறார். இதனை இளையராஜா கூர்ந்து கவனித்திருக்கிறார்.

இந்தப் பாடல் கம்போசிங்கின் போது இளையராஜா கமலிடம் நேற்று நீங்கள் விழாவில் பாடினீர்களே அதேபோன்று இந்தப் பாடலிலும் ஒரு ஹம்மிங் வரும். அதை நீங்களே பாடி விடுங்கள் என்று கூற அதன்பிறகு தான் ஜானகி பாடலின் ஆரம்பத்தில் ஒரு ஹம்மிங் பாட அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் பா… ப.. ப.. ப. பா..ப…பா என்ற ஹம்மிங்கைப் பாட பாடல் இப்படித்தான் உருவானது.

இதனைத் தொடர்ந்து ஜானகியும், கமல்ஹாசனும் கண்மணி அன்போடு, சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும், இஞ்சி இடுப்பழகி போன்ற பாடல்களைப் பாடியிருக்கிறார்.

Published by
John

Recent Posts