திருப்பரங்குன்றத்தில் பங்குனி தீர்த்த உற்சவம்

மதுரையில் அறுபடை வீடுகளில் இரண்டு உள்ளன ஒன்று பழமுதிர்ச்சோலை மற்றொன்று திருப்பரங்குன்றம். இது முருகன் வள்ளி தெய்வானையை மணம் முடித்த இடமாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று.

இந்த புகழ்பெற்ற முருகன் கோவிலின் பங்குனி திருவிழா நடந்தது

கோவிலில் மார்ச் 18ல் தொடங்கிய பங்குனி திருவிழா தினம் ஒரு ஸ்வாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு  நேற்று காலை உற்சவர் சன்னிதியில் தெய்வானை, சத்தியக்ரீஸ்வரர், கோவார்த்தனாம்பிகை, விநாயகர், சண்டிகேஸ்வரர் அஸ்தர தேவர் எழுந்தருளினர்.

மார்ச் 18 முதல் இருவேளை நடந்த யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தேறியது. பல்லக்கில் அனைத்து தெய்வங்களும் சரவணபொய்கையில் எழுந்தருளினர்.

பக்தர்கள் விழாவை இனிதே கண்டுகளித்தனர்.

Published by
Staff

Recent Posts