அட்டர் ஃபிளாப் ஆகிருக்க வேண்டிய கமலின் அந்த படம்!.. காப்பாத்தி வெற்றி படமாக்கிய பஞ்சு அருணாசலம்!..

1989 ஆம் ஆண்டு கமலின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “அபூர்வ சகோதரர்கள்” அக்கால கட்டத்தில் கமல்ஹாசன் வாழ்க்கையில் மிக மிக முக்கிய திரைப்படமாக இருந்தது. அதற்கு முன் வந்த மூன்று படங்களும் படுதோல்வி அடைந்தது இதற்கு காரணம். அந்நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். ஆனால் கமலுக்கு அது இருண்ட காலமாகவே அமைந்தது கமலின் சினிமா வாழ்க்கை இதோடு முடியப்போகுது என்று பலரும் பலவிதமாக பேசி வந்த நிலையில் அவர் சொந்தத் தயாரிப்பில் எழுத திரைப்படம் தான் அபூர்வ சகோதரர்கள்.

முதலில் இப்படம் தற்போது நாம் பார்க்கும் அபூர்வ சகோதரர்கள் போல் இருக்காது அதை ஒரு ராவான படமாக எடுத்து வைத்திருந்தார் கமல். படத்தை எடுத்து ரிலீஸ் ஆவதற்கு முன்பு முழு படத்தையும் ஒரு முறை பஞ்சு அருணாச்சலத்திற்கு போட்டு காண்பித்திருக்கிறார். படத்தை பார்த்த பஞ்சு அதிர்ந்து போய்விட்டார் ”நீங்கள் இப்படி படம் எடுத்து வெளியிட்டால் அது நிச்சயம் ஓடவே ஓடாது” என்று கூறியுள்ளார். திரை மேதை பஞ்சு அருணாச்சலம் ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று அனுபவமாய்ந்த ஒரு திறமைசாலி.

காரணம் அவர் பல வருடங்கள் கவிஞர் கண்ணதாசன் உடன் இருந்து பல பட தயாரிப்புகளை பார்த்தவர். இதனால் பஞ்ச அருணாச்சலம் படத்தை பார்தவுடன் நல்லா இல்லை என்று சொன்னதுடன் கலங்கிவிட்டார் கமல்ஹாசன். தன் சொத்து அனைத்தையும் அடமானம் வைத்து எடுத்த படம் இப்படி ஆயிற்றே என்று சோகத்தில் மூழ்கி இருந்தார். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று கமல் கேட்டார். பஞ்சு திரைக்கதை மற்றும் பல கேரக்டர்களை மாற்றினார்.

வியாபார ரீதியாக பல விஷயங்களை சேர்த்தார் படத்தில் அடிநாதம் மாறாமல் ஆனால் ஒரு புதிய பரிணாமத்தில் அதை எடுத்துச் சென்றார். இளையராஜாவின் சில பாடல்களை சேர்த்தார் மேலும் ஒரு பாட்டையும் நீக்கிவிட்டார். எங்க அம்மாவை நான் காலத் தொட்டு கும்பிடனும் டோய் என்ற பாடலை நீக்கிவிட்டு அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்ற புது பாட்டை சேர்த்தார். ஜனகராஜ் முதலில் அப்பா வேடம் என்று இருந்தது.

இதை இன்ஸ்பெக்டர் என்று மாற்றியதோடு மட்டுமின்றி படம் முழுக்க நகைச்சுவையாக மாற்றினார். மேலும் சண்டைக் காட்சிகள் பழிவாங்கும் செண்டிமெண்ட் என்று மசாலா அம்சமும் சேர்த்து புதுவித அபூர்வ சகோதரர்கள் படத்தை தயார் செய்தார். பின்னர் படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல் கமலின் வாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது. மேலும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அன்று பஞ்சு அருணாச்சலம் அந்த படத்தை மாற்றி அமைத்தது தான் ஒரு தோல்வி படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியதற்கான காரணம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...