சினிமாவை கலக்கிய பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை இந்த அரண்மனையை முதலில் கட்டியது இரவி வர்ம குலசேகர பெருமாள் என்ற மன்னன் ஆவார். பின்பு இந்த அரண்மனையை 1706ல் ஐந்தாள் திருநாள் மார்த்தாண்ட வர்மா திரும்பவும் மாற்றம் செய்து கட்டினார்.


மிகவும் அழகான அபூர்வமான கலை நயம் மிகுந்த இந்த அரண்மனை மிக வித்தியாசமானது.

அந்தக்காலத்து இயற்கை பொருட்களை வைத்து கட்டியே தரை உள்ளிட்ட இடங்கள் பள பள என இருக்கும்.

இந்த அரண்மனை சினிமாக்காரர்களின் செல்ல ஷூட்டிங் ஸ்பாட் ஆகும். பாஸில் இயக்கிய மணிசித்திரதாழு மிக முக்கியமான தமிழ் திரைப்படம் இந்த வீட்டிற்குள்ளேயே எடுக்கப்பட்டது.

அடர்ந்த இருட்டாகவும் பிரம்மிப்பாகவும் இந்த அரண்மனையை சுற்றிபார்த்தால் உணர முடியும். உள்ளே அந்த காலத்து சமையல் அறையையும் அந்த கால மன்னர் பயன்படுத்திய பொருட்களையும் பார்க்க முடியும் சுற்றிப்பார்ப்பதற்கு சில மணி நேரம் பிடிக்கும் இந்த அரண்மனை சற்று பெரியது.

கேரள படங்கள் இங்கு எடுத்தால் வெற்றி பெறும் என்ற அடிப்படையில் எடுத்து வெற்றி பெற்றது. பாஸில் இயக்கிய மணிச்சித்திர தாழு பெரும்பாலும் இங்கேயே எடுக்கப்பட்டு பெரிய வெற்றியையும் அந்த படத்தில் நடித்த ஷோபனாவுக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

தமிழ் சினிமாவில் கார்த்திக் நடித்த வருஷம் 16 திரைப்படம் இங்கேதான் பெரும்பாலும் எடுக்கப்பட்டது. அந்த படம் கார்த்திக் வாழ்க்கையிலும், அப்போது நடிக்க வந்து புதிதாக அறிமுகமாகி இருந்த குஷ்பு வாழ்க்கையிலும் மிகப்பெரும் ஒளியேற்றி வைத்தது.

இந்த அரண்மனையில் எடுத்த பல படங்கள் மாஸ் வெற்றி பெற்ற படங்கள் ஆகும்.

திருவனந்தபுரத்தில் இருந்து 60 கிமீ தூரத்திலும் நாகர்கோவிலில் இருந்து 20 கிமீ தூரத்திலும் இந்த அரண்மனை உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தது இந்த அரண்மனை.

Published by
Staff

Recent Posts