வேண்டாம் என ஒதுக்கி வைத்திருந்த படையப்பா சீன்.. படத்தின் மொத்த வரலாற்றையே மாற்றிய எழுதிய சம்பவம்!

அதுவரை தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலைப் பெற்றிருந்த இந்தியன் படத்தை முந்தி படையப்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆம்..! 1999-ல் தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிபோட்ட படம் தான் படையப்பா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஒரு கமர்சியல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படையப்பா படம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

ஹீரோயிசம், ஆக்சன், காதல், காமெடி, பஞ்ச் வசனம் என அனைத்து ஏரியாவிலும் படையப்பா வரலாறு படைத்தது. அதற்கு முன்னர் ரஜினியின் முத்து படமே அதிக வசூலைக் குவிந்திருந்தது. அதற்கு அடுத்ததாக இந்தியன் படம் வசூல் சாதனையில் இருந்தது. படையப்பா அத்தனை சாதனைகளையும் முறியடித்து சூப்பர் ஸ்டாரை மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக ஜொலிக்கச் செய்தது.

ரஜினியுடன் பல படங்களில் மோதிய மோகன்.. ஜெயித்தது யார் தெரியுமா? மீண்டும் பல ஆண்டுக்குப் பின் நிகழப்போகும் தரமான சம்பவம்

படத்தின் அனைத்து காட்சிகளிலும் தியேட்டர்களில் விசில் சப்தம் காதை பிளக்கும். குறிப்பாக ஒரு காட்சியை சொல்ல வேண்டும் என்றால் ரம்யா கிருஷ்ணனை ரஜினி அவர் வீட்டில் சந்திக்க வரும் காட்சிதான் ஒட்டுமொத்த படத்தையே தூக்கிப் பிடித்தது. அந்த காட்சியில் படையப்பா, நீலாம்பரி கதாபாத்திரங்களின் மாஸ் குறையாமல் இயக்குனர் புல்லரிக்க வைத்திருப்பார். ரம்யாகிருஷ்ணன் சேரில் அமர்ந்து கால் மேல் காலைப் போட்டு பேச பதிலுக்கு ரஜினி தனது தோளின் மேல் உள்ள துண்டை தூக்கிபோட்டு ஊஞ்சலை இழுத்து அதில் அமர்வார். அப்போது ஒரு ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை வரும் பாருங்கள். அந்த இசை இன்றுவரை மாஸ் BGM வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

இந்த காட்சியானது இராமாயணத்தில் அனுமன் ராவணனை சந்திக்கச் செல்லும்போது அவர் தனது வாலையே சிம்மாசனமாக்கி அமர்வாரே அதே போல் ரஜினி உட்காரும் படி கதை எழுதப்பட்டிருந்தது. ஆனால் இதில் முதலில் ஊஞ்சலுக்குப் பதிலாக கதிரை (சாய்வு நாற்காலி) இழுத்துப் போட்டு உட்காரும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த கதிரை சிரஞ்சீவியின் தெலுங்கு படம் ஒன்றிற்கு வாங்கிச் சென்று விட்டார்களாம். எனவே கதிரைக்குப் பதிலாக ஊஞ்சல் பயன்படுத்தலாம் என் எண்ணி அதன்பின் ஊஞ்சல் வைத்து அந்த சீன் எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் தவிர்க்க முடியாத பட்சத்திற்கு ஊஞ்சலை வைத்து எடுக்கப்பட்ட இந்தக் காட்சி தான் படத்தின் வரலாற்றையே மாற்றி எழுதியது. இப்படி படையப்பா மேக்கிங் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். படையப்பா படம் வெளியாகி 25 வருட நிறைவை தற்போது சினிமா உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...