ரஜினியுடன் பல படங்களில் மோதிய மோகன்.. ஜெயித்தது யார் தெரியுமா? மீண்டும் பல ஆண்டுக்குப் பின் நிகழப்போகும் தரமான சம்பவம்!

தமிழ் சினிமாவில் 1980 களில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இரு நடிகர்கள் அவர்கள் இருவரையுமே மிரள வைத்தனர். ஒருவர் மோகன். மற்றொருவர் ராமராஜன். இயக்குனர் பாலுமஹேந்திராவின் கன்னட படமான ‘கோகிலா’ படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த மோகன் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆனார். குறிப்பாக இளையராஜாவின் இசை இவருக்கு கை கொடுத்தது. ஒரு கட்டத்தில் மோகன் நடித்த அத்தனை படங்களும் ஹிட் ஆனது. இவரின் வளர்ச்சியைப் பார்த்து ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகமே அதிர்ந்தது. ‘மைக் மோகன்’ என ரசிகர்களால் போற்றப்பட்டார்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மட்டும் பல படங்களில் மோதி வெற்றி கண்டுள்ளார் மோகன். அதில் குறிப்பிட தகுந்த படங்களைச் சொல்ல வேண்டுமெனில் 1980-ல் ரஜினியின் பொல்லாதவன் படமும், மோகனுக்கு மூடுபனி படமும் வெளியானது. இதில் பொல்லாதவன் 100 நாட்களைக் கடந்தும், மூடுபனி 200 நாட்கள் கடந்தும் வெற்றி பெற்றது.
அடுத்ததாக முரட்டுக்காளையும், நெஞ்சத்தைக் கிள்ளாதே படமும் வெளியாகி இதில் முரட்டுக்காளை பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. நெஞ்சத்தைக் கிள்ளாதே சுமாரான வெற்றி பெற்றது. 1982-ல் ரஜினிக்கு தனிக்காட்டு ராஜா வெளியாக, மோகனுக்கு பயணங்கள் முடிவதில்லை வெளியானது. இதில் பயணங்கள் முடிவதில்லை வெற்றியைச் சொல்ல வேண்டியதே இல்லை. தனிக்காட்டு ராஜா 100 நாட்கள் கடந்து ஓடியது.

இளையராஜாவின் போட்ட டியூனை விரும்பாத ரஜினி.. வீரா படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!

இவ்வாறாக ரஜினி மோகன் படங்கள் நேரடியாக 19 முறை மோதியுள்ளது. இதில் பெரும்பாலும் மோகன் படங்களே வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி திரையில் வசூலில் ரஜினிக்கு வில்லனான மோகனின் பயணம் 90களின் பிற்பகுதியில் சறுக்க, சூப்பர் ஸ்டார் ரஜினி அதன்பின் இன்றுவரை வசூல் சக்கரவர்த்தியாக கலக்கி வருகிறார்.

தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். மோகனும் நீண்ட இடைவெளிக்குப் பின் விஜயின் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக மோகனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மோகனும் கதை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது உறுதிப்படுத்தப்படுமானால் விரைவில் ரஜினிக்கு வில்லனாக மோகன் லோகேஷ் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...