Oppo நிறுவனத்தின் செம்ம இயர்பட்ஸ்.. விலை இவ்வளவு தானா?

Oppo நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட் போன் மாடல்களை வெளியிட்டு வருவதோடு இயர்போன்களையும் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அடுத்த மாதம் புதிய இயர்பட்ஸ் ஒன்றை வெளியிட இருக்கும் நிலையில் இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.

Oppo Enco Air 3 Pro என்ற புதிய இயர்பட்ஸ் இந்தியாவில் ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இயர்பட்ஸ் அமேசான் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் அதுமட்டுமின்றி இதன் விலை சுமார் ரூ. 3,499 என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Oppo Enco Air 3 Pro மூங்கில் ஃபைபர் டயாபிராம் கொண்ட 12.4மிமீ டைனமிக் டிரைவரைக் கொண்டுள்ளது. இந்த இயர்பட்கள் 49dB வரை இரைச்சலை கட்டுப்படுத்தும். கேமிங் பிரியர்களுக்காக 47எம்எஸ் குறைந்த லேட்டன்சி பயன்முறையையும் கொண்டுள்ளது.

Oppo Enco Air 3 Pro இயர்பட்ஸ் சாதனத்தில் புளூடூத் 5.3, ஐபிஎக்ஸ்4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 6.5 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் ஆகியவை அடங்கும்.

Oppo Enco Air 3 Pro சாதனத்தின் முக்கிய அம்சங்கள் இதோ:

* மூங்கில் ஃபைபர் டயாபிராம் கொண்ட 12.4மிமீ டைனமிக் டிரைவர்

* 49dB வரை இரைச்சலை குறைகும்

* கேமிங்கிற்கு 47ms குறைந்த-லேட்டன்சி பயன்முறை

* புளூடூத் 5.3

* IPX4 வாட்டர் ரெசிஸ்டெண்ட்

* ஒருமுறை சார்ஜ் செய்தால் 6.5 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews