சிறப்பு கட்டுரைகள்

வெயில் காலத்தில் உடல் சூட்டை உடனே குறைக்கும் ஒரே பழம் எதுன்னு தெரியுமா? இந்த பதிவை பாருங்கள்..

பொதுவாக வெயில் காலத்தில் சூடு அதிகமாக இருக்கும். உடல் சூடு அதிகரிப்பதால் பல வியாதிகள் நம்மை வந்தடைகிறது. நாம் நமது உடலின் வெப்ப நிலையை சமமாக வைத்திருக்க வேண்டும். வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற சந்தேகங்கள் அதிகமாக இருக்கும்.

சரியான உணவு முறையை பின்பற்றி நாம் நமது உடலை குளிர்ச்சியாக வைத்து நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

அந்த வகையில் உடல் சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பழமாக கிர்ணி பார்க்கப்படுகிறது. மேலும் கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ, இ, சி, பீட்டா, பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இது உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்தாக அமைகிறது. எனவே கிர்ணி பழத்தில் உள்ள மருத்துவ குறிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

சருமம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் இப்பழத்தை அவ்வபோது சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சரும பிரச்சனைகளை சரி செய்யும். பார்வை குறைபாடு பிரச்சனை இருப்பவர்களுக்கு இப்பழம் சிறந்தது.

புகையிலை பொருட்களால் ஏற்படும் நுரையீரல் பிரச்சினைகளை இப்பழம் மெதுவாக சரி செய்யும் என்று சொல்லப்படுகிறது. கிர்ணி பழத்தில் சர்க்கரை குறைவாக இருப்பதால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

வாய் துர்நாற்றத்தை ஒழிக்கும் 10 எளிய வீட்டு பொருட்கள் இதோ!

இவற்றால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. வயிற்றுக் கோளாறுகளுக்கு இயற்கை மருந்தாக கிர்ணி பழம் அமைகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்கிறது.

Published by
Velmurugan

Recent Posts