ஒரே படத்தில் ஹீரோ – வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் கலக்கிய ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் ஹீரோவை முன்னிலைப்படுத்தி பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி நடை போட்டுள்ளது. அந்த திரைப்படங்களில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் தனி சிறப்பு பெற்றிருக்கும். இந்த காலத்தில் வில்லன் நடிகர்களுக்கும் பல ரசிகர் கூட்டம் உள்ளது. பல முன்னணி ஹீரோக்களும் வில்லனாக சில படங்களில் நடித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் ஒரே படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த ஹீரோக்களின் படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நாம் முதலில் பார்க்கும் திரைப்படம் வாலி. 1999 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தில் அஜித் குமார் அண்ணன் தம்பி என்னும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் சிம்ரன் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். தம்பி மனைவி மீது ஆசைப்படும் வில்லனாக அண்ணன் அஜித் நடித்திருப்பார். இந்த இரண்டு கதாபாத்திரத்திற்குமே அஜித் நடிப்பின் மூலம் வித்தியாசம் காட்டியிருப்பார்.

இரண்டாவது திரைப்படம் அழகிய தமிழ் மகன். பரதன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன் இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஹீரோ விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயாவும், வில்லன் விஜய்க்கு ஜோடியாக நமிதாவும் நடித்திருப்பார்கள்.

மூன்றாவது திரைப்படம் மன்மதன். ஏ.ஜே முருகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன் இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் இரட்டை கதாபாத்திரத்தில் அண்ணன் தம்பியாக நடித்திருப்பார். தம்பி ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் வில்லன் அவதாரம் எடுக்கிறார் மன்மதன் சிம்பு. இதை போல் ஆண்களை ஏமாற்றும் பெண்களை தேடி தேடி கொலை செய்யும் கதாபாத்திரத்தில் அண்ணன் சிம்பு வில்லனாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்றை பெற்றது.

தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய எம்.ஜி.ஆர் படம்!

நான்காவது திரைப்படம் இருமுகன். வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். அந்த வகையில் ஆனந்த சங்கரி இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் இருமுகன். இந்த படத்தில் விக்ரம் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தார்.

ஐந்தாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அதாவது இரட்டை சகோதரர்களாக நடித்திருப்பார். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்திற்கு இடையில் பல வித்தியாசங்கள் தென்படும் வகையில் மிகத் திறமையாக தனுஷ் நடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...