ஐயோ பாவம் சிங்கப்பூருக்கு இப்படி ஒரு நிலைமையா? புலம்பும் தொற்று நோயியல் அமைப்பு!

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி, உலக நாடுகளை ஆட்டிப் படைத்துவிட்டது. கொரோனாவின் முதல் இரண்டு அலைகளைக் கடந்து தற்போது மூன்றாவது அலையில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

கொரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்திவர மற்றொருபுறம் ஒமிக்ரான், புளோரோனா வைரஸ்கள் அச்சுறுத்துகின்றன.

கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் படையெடுத்த ஒமிக்ரான் தற்போது சிங்கப்பூரை ஆடிப் படைக்கத் துவங்கியுள்ளது. அதாவது சிங்கப்பூரில் 692 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அறிவித்த சிங்கப்பூர் தொற்று நோயியல் நிபுணர் இன்னும் ஓரிடு வாரங்களில் சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு குறைந்தது 10 ஆயிரம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

60 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரில் 10 ஆயிரம் தினசரி பாதிப்பு என்பது கடுமையான பாதிப்பு வகையிலே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் தற்போது பூஸ்டர் தவணை தடுப்பூசி பணியினை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews