ஐம்பதாயிரம் வேண்டாம்.. ஐந்து லட்சம் போடுங்க.. ஒரே வார்த்தையில் தேவரை மடக்கிய ஆரூர்தாஸ்!

கொங்குநாட்டில் பிறந்த சாண்டோ சின்னப்ப தேவர் சினிமா தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன்பாக நடிகராகவும் இருந்துள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இருவரும் இணை பிரியா நண்பர்களாக விளங்கினர். தான் தயாரிக்கும் முதல் படத்தில் எம்.ஜி.ஆரையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார் தேவர்.

தனது முதல் படத்தினை கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் படமாக்க விரும்பிய தேவர் நிர்வாகச் சிக்கல் காரணமாக சென்னைக்கு தனது அலுவலகத்தை மாற்றினார். அப்படி அவர் சென்னைக்கு முதன் முதலாக வந்த போது அவர் கையில் இருந்தது 10,000 ரூபாய் பணம் மற்றும் பியட் கார் மட்டும் தான். இவ்வாறு எம்.ஜி.ஆரை வைத்து முதன் முதலாக தாய்க்குப் பின் தாரம் என்ற படத்தினைத் தயாரிக்க படம் மாபெரும் வெற்றி கண்டது. அதன்பின் தேவர் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளராக மாறினார்.

இப்படி இருக்கையில் ஒருமுறை தேவர் பிலிம்ஸ்-ன் சார்பில் எடுக்கப்பட்ட தெய்வம் படத்திற்காக வசனம் எழுத வந்ததிருந்தார் வசனகார்த்தா ஆரூர்தாஸ். தான் எழுதிய வசனத்தை தேவரிடம் படித்துக் காட்டினார். அதில் வரும் ஒரு காட்சியில், “கடத்தப்பட்ட குழந்தை திரும்ப வேண்டும் என்றால், நான் சொல்லும் இடத்துக்கு 50 ஆயிரம் பணம் கொண்டு வர வேண்டும்” என்று வில்லன் கதாபாத்திரத்திற்காக எழுதியதை படித்துக் காட்டினார்.

அப்போது தேவர், “ஏன் 50 ஆயிரம் என்று போடுகீறீர்கள் 5 இலட்சம் என்று போடுங்கள்” என்றிருக்கிறார். இதனைக் கேட்டு பலமாகச் சிரித்த ஆரூர்தாஸ், சின்னப்ப தேவரிடம் ஒன்றை நினைவு கூர்ந்தார். அப்போது “தி.நகரில் வாடகைக் கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து, மொட்டை மாடியில் பழைய கோரைப் பாயில் படுத்தபடி பல விஷயங்கள் பேசினோம். அப்போது நீங்கள் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது.“

ரஜினி படத்தில் நடிக்க வில்லனாக மறுத்த ரகுவரன்.. காரணம் இப்படி ஒரு கடவுள் பக்தியா?

உடனே தேவர் “என்ன சொன்னேன்“ என்று கேட்க, “தாசு, 2 லட்சம் சம்பாதிசுட்டேன்னா, இந்த மெட்ராசை விட்டுட்டு கோயம்புத்தூருக்குப் போயிடுவேன். ஒரு லட்சத்துக்கு வீடு, வாசல், நகை. இன்னொரு லட்சத்துல கொஞ்சம் நிலம் வாங்கிட்டு, பாக்கி பணத்தை பேங்குல போட்டிடுவேன்” என்று கூறினீர்கள் என ஆரூர்தாஸ் நினைவுப் படுத்தினார்.

அப்போது அந்த 2 இலட்சம் உங்களுக்குப் பெரிதாகத்தோன்றியது. இன்று நீங்கள் பல லட்சத்திற்கு அதிபதி. அதே போல் தான் இந்தப் பட வசனமும். சிங்கிள் டீயும், ரெண்டு பன்னும் சாப்பிடுற ஏழை கடத்தல் காரனுக்கு இந்த 50,000 மிகப் பெரிய தொகை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 5 லட்சம் என்றே மாற்றி விடுகிறேன” என்று ஆரூர்தாஸ் தேவரிடம் கூறியிருக்கிறார்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. தேவரின் கண்கள் குளமாக 5 இலட்சம் என்று கூறியதை மீண்டும் 50 ஆயிரம் என்று மாற்றினார் தேவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...