ரஜினி படத்தில் நடிக்க வில்லனாக மறுத்த ரகுவரன்.. காரணம் இப்படி ஒரு கடவுள் பக்தியா?

ரஜினியும், ரகுவரனும் நீண்ட கால நண்பர்கள். ரகுவரன் வில்லனாக நடிக்கத் துவங்கிய நாளிலிருந்து ரஜினியின் பல படங்களில் ஆஸ்தான வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். சிவா படத்தில் ஆரம்பித்த இவர்களது காம்போ மனிதன், மிஸ்டர் பாரத், ராஜா சின்ன ரோஜா, ஊர்க்காவலன், முத்து, பாட்ஷா, அருணாச்சலம் என சிவாஜி வரை நீண்டது. இதில் சிவாஜி படத்திலும், சிவா படத்திலும் நண்பராக நடித்திருப்பார் ரகுவரன். ஏனைய படங்கள் அனைத்திலும் இவரது வில்லத்தனமும், ரஜினியின் ஹீரோயிசமும் ரசிகர்களுக்கு திகட்டாத திரை விருந்து என்றே சொல்லாம்.

படையப்பா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் ரஜினி பாபா படத்தை தனது சொந்த தயாரிப்பில் எடுக்க ஆரம்பித்தார். மஹாவதார் பாபாஜியின் மகத்துவத்தைக் குறிக்கும் வகையில் ஆன்மீகம் கலந்த ஆக்சன் படமாக இதில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். பாட்ஷா படத்தில் ரஜினியின் கேரியரையே மாற்றிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்திலும் இயக்குநராகப் பணியாற்றினார். பாட்ஷா படத்தில் எப்படி ரஜினி-ரகுவரன் காம்போ பெரிய அளவில் பேசப்பட்டதோ அதே போன்று இந்தப் படத்திலும் ரகுவரனை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து பேசுவதற்காக ரகுவரனிடம் சென்றார் சுரேஷ் கிருஷ்ணா. அப்போது ரகுவரன் எனக்கு மீண்டும் இப்படி வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். காரணம் என்னவெனில் படத்தில் ரஜினியின் பெயர் பாபா. எனவே வில்லனாக நடிக்கும் ரகுவரன் (இப்போ ராமசாமி) பாபாவைப் போடா.. வாடா.. என்று அழைக்கும்படியாக வரும் வசனங்களைப் பேச மறுத்திருக்கிறார்.

குருவிற்காக சூப்பர் ஸ்டார் செய்த கைமாறு.. சோகத்திலும் மளமளவென வளர்ந்த பாண்டியன் திரைப்படம்

ஏனெனில் அவர் தீவிர சத்யசாய் பாபா பக்தராம். எனவே சினிமாவுக்காகக் கூட பாபாவின் பெயரை டா போட்டு அழைப்பதில் விருப்பமில்லாமல் பாபா பட வாய்ப்பினைத் தவிர்த்திருக்கிறார். இதன்பிறகே இந்தக் கதாபாத்திரத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடித்திருக்கிறார்.

இப்படி பல படங்களில் ஒன்றாகப் பணியாற்றி மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த ரஜினி-ரகுவரன் காம்போ தனது ஆன்மீகக் கொள்கைக்காக பாபா பட வாய்ப்பினை மறுத்தது அவரின் உயர்ந்த பக்தி மனப்பான்மையைக் காட்டுவதாக இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...