பதவி விலகிட்டா உடனே பிரச்சனை சரியாகிடுமா? சிவராஜ் பாட்டீல் பதவி விலகுனாரு, அதுக்கு அப்புறம் பயங்கரவாத தாக்குதல் நடைபெறவே இல்லையா? ரயில்வே மினிஸ்டர் பதவி விலகுனாரு, அதுக்கு அப்புறம் ரயில் விபத்து நடக்கவே இல்லையா? தப்பு நடந்துச்சுன்னா, அந்த தப்பை எப்படி சரி செய்யனும்ன்னு பாக்குறதை விட்டு பதவி விலகு பதவி விலகு கோஷம் போட்டா அது நடந்துருமா? கரப்பான்பூச்சிக்கெல்லாம் பயந்து சிங்கம் பின்வாங்குமா?

கல்வி சீர்திருத்தம் மற்றும் நீட் முறைகேடு என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தத் துடிக்கும் சில சக்திகளுடன் இணைந்து…

dharmendra pradhan

கல்வி சீர்திருத்தம் மற்றும் நீட் முறைகேடு என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தத் துடிக்கும் சில சக்திகளுடன் இணைந்து தீவிரமாகக் கூச்சலிட்டு வருகின்றன. அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவதால் மட்டும் இது போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உடனடியாக ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்து விடுமா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், 2008-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற போது அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவ்வாறு அமைச்சர் பதவி விலகியதால் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் முழுமையாக ஒழிந்து போய்விட்டதா என்ன?

அதேபோல், கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற காலக்கட்டங்களில் தொடர்ச்சியாக ரயில் விபத்துகள் ஏற்பட்ட போதெல்லாம் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால், அந்த ராஜினாமாக்களால் நாட்டில் நிகழ்ந்த ரயில் விபத்துகள் அனைத்தும் தடுக்கப்பட்டுவிட்டனவா என்ற கேள்விக்கும் அங்கே இடமில்லை.

மாறாக, எத்தகையச் சிக்கலான சூழலிலும் களத்தில் நேரடியாக நின்று அந்தப் பிரச்சனைக்கான முறையான தீர்வைக் காண்பதுதான் உண்மையான பொறுப்புணர்வாகும். அதைத்தான் நமது மத்திய அரசு தற்போது திறம்படச் செய்து வருகிறது. நீட் முறைகேடு புகார்கள் எழுந்தவுடன் சிபிஐ மூலமாக உடனடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, தவறு இழைத்தவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன.

இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க, காகித வடிவில் வினாத்தாள்களை அச்சிட்டு வெளியூர்களுக்குக் கொண்டு செல்வதில்தான் பல குளறுபடிகள் நடக்கின்றன என்பதை அரசு ஆழமாக உணர்ந்துள்ளது. இந்த முறைகேடுகளின் மூல காரணத்தையே முற்றிலுமாகத் தகர்க்கும் வகையில், டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின்படி இனி வரும் காலங்களில் நீட் தேர்வு முழுவதுமாக கணினி சார்ந்த ஆன்லைன் தேர்வாக மாற்றப்படுகிறது.

டிஜிட்டல் முறையிலான வினாத்தாள்கள் மற்றும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வினாத்தாள் கசிவதற்கான வாய்ப்புகளே முற்றிலும் ஒழிக்கப்படும். அமைச்சரின் ராஜினாமாவைக் கோருவது என்பது வெறும் அரசியல் நாடகமே தவிர வேறில்லை. மாறாக, நவீன கணினி தேர்வு முறையும் கடுமையான சட்ட விதிகளுமே மாணவர்களின் பொன்னான எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்ற உண்மையை உணர்ந்து மத்திய அரசு நிலையான தீர்வை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.