லூசு பெண்ணே.. லூசு பெண்ணே.. இன்ஸ்டாவில் குறைந்த 2 ஃபாலோயர்கள்.. அதிர்ச்சியில் கணவனை விவாகரத்து செய்ய முடிவு செய்த மனைவி..!

இன்ஸ்டாகிராமில் வெறும் இரண்டு ஃபாலோயர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த ஒரு பெண், தனது கணவனை விவாகரத்து செய்ய முடிவெடுத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின்…

Instagram

இன்ஸ்டாகிராமில் வெறும் இரண்டு ஃபாலோயர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த ஒரு பெண், தனது கணவனை விவாகரத்து செய்ய முடிவெடுத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பில்குவா பகுதியைச் சேர்ந்த நிஷா என்பவர், நொய்டா பகுதியை சேர்ந்த விஜேந்திரா என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். நிஷா தனது நண்பர்கள் வட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் என்பதும், ரீல்ஸ் தொடர்ந்து பதிவிடும் வழக்கத்தை கொண்டுள்ளார் என்பதும் தெரிகிறது.

இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் அவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கவனம் செலுத்தி வந்ததை பார்த்த கணவர், “ஆன்லைன் செயல்பாடுகளை குறைத்து குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு” வலியுறுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சிலமுறை சண்டை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின் ஒரு கட்டத்தில் கணவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, இன்ஸ்டாகிராம் செயல்பாடுகளை குறைத்து கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், அதே நேரத்தில், ஃபாலோயர்கள் குறைந்ததை பார்த்து நிஷா அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் மீண்டும் தனது கணவருடன் சண்டை போட்ட நிஷா, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கு மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். “தன் கணவர் தன்னை இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்,” என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார். நிஷாவின் புகாரை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவருக்கு அறிவுரை கூறினர். இருப்பினும், நிஷா தனது கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த பிரச்சினை காரணமாக விஜேந்திரா மன அழுத்தம் காரணமாக வேலையை இழந்துவிட்டதாகவும், தற்போது அவரது நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நெட்டிசன்கள் இந்தச் சம்பவம் குறித்து லூசு பெண்ணே, இன்ஸ்டாவை கைவிட்டு, கணவருடன் நல்லபடியாக சேர்ந்து வாழ் என்று கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர்.