திமுக அவசரப்பட்டு பாஜக பக்கம் போகிறது.. 2029 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு குறைவு.. இந்தியா கூட்டணியுடன் சிஜேபியும், தவெகவும் சேர்ந்தால் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு.. 12 வருடங்கள் மத்தியில் எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருந்த திமுக, அவசர முடிவால் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய நிலை வரும்… மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தவெக, மத்தியிலும் ஆட்சியில் பங்கேற்றால் திமுகவை காப்பாற்ற யாராலும் முடியாது.. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் அது தற்கொலைக்கு சமம்.. அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தல்..

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, திமுக அவசரப்பட்டு பாஜகவை நோக்கி நகர்வது அரசியல் ரீதியாக அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர். முதலமைச்சர் விஜய்…

stalin udhayanidhi

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, திமுக அவசரப்பட்டு பாஜகவை நோக்கி நகர்வது அரசியல் ரீதியாக அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் சட்டப்பூர்வ அதிரடி நடவடிக்கைகளாலும், உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்த நெருக்கடிகளாலும் நிலைகுலைந்துள்ள திமுக தலைமை, தற்காலிக பாதுகாப்பிற்காக டெல்லி பாஜகவின் நிழலை தேடி ஓடுவது ஒரு தொலைநோக்கற்ற முடிவு என்பதில் மாற்று கருத்து இல்லை. மாநிலத்தில் அதிகாரம் பறிபோன கையோடு, தேசிய அளவில் தவறான அரசியல் கணக்கை திமுக போடுவதாகவே பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, வரும் 2029 பொதுத்தேர்தலில் தேசிய அளவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக புள்ளிவிவரங்களும் தற்போதைய அரசியல் சூழல்களும் உணர்த்துகின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலவும் தொடர் ஆட்சிக்கெதிரான அலை, பொருளாதாரக் காரணங்கள் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் கை ஓங்குவதற்கே வழிவகுத்துள்ளன. இத்தகைய சூழலில், தேசிய அரசியல் காற்றடிக்கும் திசையைக் கணிக்கத் தவறி, சரிவை நோக்கிச் செல்லும் பாஜகவுடன் திமுக கைகோர்ப்பது ‘அமரும் கிளையைத் தானே வெட்டிக்கொள்வதற்கு சமமாகும்.

இதனிடையே, தேசிய அரசியலில் உருவாகிவரும் புதிய கூட்டணிக் கணக்குகள் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளன. சமாஜ்வாதி, ஜேடியு போன்ற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து, தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் தவெகவும் இந்தியா கூட்டணியுடன் இணைந்தால், 2029-இல் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடிப்பது மிகவும் எளிதாகிவிடும். இந்த தொலைநோக்குப் பார்வையை உணராமல், உடனடி சுயநலனுக்காக திமுக பாஜக பக்கம் சாய்வது அதன் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும்.

கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுக, இப்போது எடுத்துள்ள இந்த அவசரமான முடிவால், 2029-க்குப் பிறகும் மீண்டும் மத்தியிலும் மாநிலத்திலும் எதிர்க்கட்சியாகவே முடங்கிப்போகும் ஆபத்து உருவாகியுள்ளது. தன் மீது சாட்டப்படும் ஊழல் வழக்குகள் மற்றும் குடும்பத்தின் மீதான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பாஜகவிடம் சரணடைவது, திமுகவின் எஞ்சியிருக்கும் அரசியல் நம்பகத்தன்மையையும் முழுமையாக அழித்துவிடும். அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்ட இந்தத் தவறான கணக்கு, கட்சியை மீட்டெடுக்க முடியாத பள்ளத்தில் தள்ளிவிடும்.

மறுபுறம், தமிழ்நாட்டில் அதிரடி ஆட்சியைக் கொடுத்துவரும் தவெக, வரும் 2029-இல் தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகி மத்திய அரசிலும் பங்கேற்றால், அது திமுகவின் வரலாற்று முடிவுக்கே வழிவகுக்கும். மாநிலத்திலும் முதலமைச்சர் விஜய்யின் ஆளுமை, மத்தியிலும் தவெகவின் அதிகாரப் பங்கேற்பு என்ற நிலை உருவானால், திமுக எதிர்கொள்ளவிருக்கும் சட்டப்பூர்வ நெருக்கடிகளில் இருந்தும், மக்கள் செல்வாக்கு சரிவில் இருந்தும் அந்த இயக்கத்தைக் காப்பாற்ற யாராலும் முடியாது என்பதுதான் நிதர்சனம்.

எனவே, இத்தனை காலம் கட்டிக் காத்த இந்தியா கூட்டணியை விட்டு திமுக வெளியேறுவது என்பது அரசியல் ரீதியாகத் தனது சொந்தக் கையாலேயே தனக்குத்தானே செய்துகொள்ளும் ‘அரசியல் தற்கொலைக்கு’ச் சமமாகும் என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் அடித்துச் சொல்கின்றனர். கொள்கை முழக்கங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, தற்காலிகப் பாதுகாப்பிற்காக எதிரியிடமே சரணடையும் திமுகவின் இந்த வியூகம், 2029 தேர்தலில் அந்தப் கட்சியின் கதையை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்பதே தற்போதைய அரசியல் களம் உணர்த்தும் உண்மை.