100 நாள்ல்ல என்ன கிழிச்சிங்கன்னு கேட்டவங்களுக்கு சரியான பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய்.. தவெகவின் ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொன்னா பட்டியலிட்டு அசத்தல்.. இந்த 100 நாள்ல்ல செஞ்சதுல பாதி கூட திமுக ஆட்சியில செய்யலையே.. 50 வருட திராவிட ஆட்சியில சாதிக்க முடியாததை 4 மாசத்துல சாதிச்சு காட்டியிருக்கார் நம்ம முதல்வர் விஜய்.. இதுதான் மக்கள் ஆட்சிக்கும் வாரிசு ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்…
நம்ம தவெக அரசுப் பொறுப்பேற்று வெறும் 100 நாட்கள்தான் ஆகுது… அதுக்குள்ள “100 நாள்ல என்ன புடுங்கி கிழிச்சீங்க?”னு எதிர்க்கட்சிகளும் வாடகை வாய்களும் கேலி பேசுறாங்களா? அவங்க மூஞ்சியில கரியைப் பூசுற மாதிரி நம்ம முதலமைச்சர் விஜய் அடுக்கியிருக்க சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டி முகத்தில் அறையுங்கள்! வெறும் 100 நாட்களில் தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி, சொன்னதைச் செய்யும் தங்க ஆட்சி என்பதை ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார் நம்ம தளபதி விஜய். லஞ்சமும் ஊழலுமற்ற தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்து, தமிழ்நாட்டின் பொற்கால விடியலுக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளார்!
பதவியேற்ற குறுகிய காலத்திலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்டு, பள்ளி மற்றும் திருக்கோயில்கள் அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூடி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் நம்ம முதல்வர். அதுமட்டுமில்லாமல், சாதாரண ஏழை எளிய குடும்பங்களின் சுமையைக் குறைக்க 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரத் திட்டம் உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள்களை அடியோடு ஒழிக்க 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 சிறப்புத் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன!
எதிர்காலத் தூண்களான குழந்தைகளின் நலனுக்காக, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் வகையில் 13 லட்சம் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், நெல்லுக்கான ஊக்கத்தொகை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹2,750-ஆகவும், பொது ரக நெல்லுக்கு ₹2,600-ஆகவும் உயர்த்திக் கொடுத்து விவசாயிகளின் தோழனாக நிற்கிறது நம்ம அரசு. பால்காரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டுள்ளது!
தாய்மார்களின் முகத்தில் புன்னகையைக் காண ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ செப்டம்பர் 28 முதல் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் இலவசமாகப் பயணிக்க ‘வெற்றிப் பயணி திட்டம்’ அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது! ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் ‘அன்னபூரணி சூப்பர் திட்டம்’ வரும் பொங்கல் பண்டிகை முதல் தமிழகக் குடும்பங்களைச் சென்றடையவுள்ளது. குடும்பத்திற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ₹5 லட்சத்திலிருந்து அதிரடியாக ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டு மக்கள் உயிரைக் காக்கும் அரணாக மாறியுள்ளது!
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக, 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்சவரம்பின்றி முற்றிலும் இலவசச் சிகிச்சை அளிக்கும் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ தொடங்கப்பட்டு தாய்மார்களின் ஆசியைப் பெற்றுள்ளது. எழை எளிய மக்களின் பசியைப் போக்க 630 அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் முழுவீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ‘சிங்கப்பெண் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் ₹1,850 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுப் பணிகள் முதற்கட்டமாக விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளன!
இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய, இந்த முதல் 100 நாட்களிலேயே ₹1 லட்சம் கோடி அளவிலான பிரம்மாண்ட முதலீடுகளை ஈர்த்து, 1,06,998 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெறும் 100 நாட்களில் இத்தனை இமாலய சாதனைகளைச் செய்து காட்டிய நம்ம முதலமைச்சர் விஜய்யின் இந்த வேகத்தையும் சாதனைகளையும் பார்த்துப் போலி திராவிடக் கட்சிகள் கதிகலங்கிப் போய் நிற்கின்றன. இனிமேலும் நம்ம அரசு பற்றி அவதூறு பேசுபவர்கள் முகத்திற்கு நேராக இந்த 100 நாள் சாதனைப் பட்டியலைத் தூக்கிக் காட்டி சாட்டையடி பதிலடி கொடுங்கள்!





