செய்திகள்

117 தனியார் பள்ளிகளில் பணம் வசூல்.. அரசகுமார் குடும்பத்தினர் உள்பட 49 வங்கிக்கணக்குகள் முடக்கம்.. அன்பில் மகேஷ் வீட்டு சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? டோட்டலா சிக்கியாச்சு? இனிமேல் தப்பிக்க வாய்ப்பே இல்லை.. அதிமுக ஆட்சி என்றால் சமாதானம் ஆகிவிடலாம், ஆனால் தவெக ஆட்சியில் அதற்கும் வாய்ப்பில்லை..

117 தனியார் பள்ளிகளில் பணம் வசூல்.. அரசகுமார் குடும்பத்தினர் உள்பட 49 வங்கிக்கணக்குகள் முடக்கம்.. அன்பில் மகேஷ் வீட்டு சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? டோட்டலா சிக்கியாச்சு? இனிமேல் தப்பிக்க வாய்ப்பே இல்லை.. அதிமுக ஆட்சி என்றால் சமாதானம் ஆகிவிடலாம், ஆனால் தவெக ஆட்சியில் அதற்கும் வாய்ப்பில்லை.. இதற்கு முன்னாள் தொட்டவங்களையும் விடமாட்டேன் என்று சூளுரைத்த முதல்வர் விஜய், இப்போது அதிரடியில் இறங்கிவிட்டார்.. இனி ஒவ்வொரு நாளும் பிரேக்கிங் நியூஸ் தான்…

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று சோதனை நடந்து வரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் தீவிர சோதனையின் மூலம், 117 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, A1 அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 20 வங்கிக் கணக்குகளும், A2 முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு நிதிப் பரிவர்த்தனைகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் பல கட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளின் போது குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் சார்ந்த பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பங்கு மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளுக்கிடையிலான தொடர்புகள் பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றன. சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் மின்னணு ஆவணங்களின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உயர் மட்டத் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாலடி கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான 2 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அதிரடிச் சோதனைகள் மூலமாகத் திரட்டப்படும் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு பதிவுகள் இந்த வழக்கில் மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சரின் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் இந்த சோதனைகள் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடத்தப்படும் இந்த விசாரணைகளின் முடிவில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்றும், சட்டத்திற்கு விரோதமாகச் செயல்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.