நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக…

ajithkumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

தற்போது நடிகர் அஜித்குமார் பத்மபூஷன் விருதை பெற்றார். இந்நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்கு அட்மிட் ஆகி இருக்கிறார் என்று ஒரு பக்கம் கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் நேற்று அவர் ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே சிக்கிக் கொண்டதால் காலில் சிறு காயம் ஏற்பட்டு விட்டது அதற்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகி இருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் அவர் நலமுடன் வரவேண்டும் என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.