மதகஜராஜா படத்தை பற்றி ஒரு விமர்சனம் கேட்டேன்… கலிகாலம் என்று நினைத்தேன்… விஷால் பகிர்வு…

விஷால் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபலமான தயாரிப்பாளர். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி…

vishal

விஷால் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபலமான தயாரிப்பாளர். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் விஷால். 2004 ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஷால்.

தொடர்ந்து சிவப்பதிகாரம், திமிரு போன்ற திரைப்படங்களில் நடித்தார் விஷால். 2007 ஆம் ஆண்டில் தாமிரபரணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விஷால். தொடர்ந்து மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன் என வெற்றி திரைப்படங்களில் நடித்து 2010 கால கட்டத்தில் புகழின் உச்சியில் முன்னணி நடிகராக இருந்தார் விஷால்.

பின்னர் பட்டத்து யானை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஆம்பள, பாயும்புலி, மருது, கத்தி சண்டை, துப்பறிவாளன் சண்டக்கோழி 2, மதகஜராஜா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷால். தற்போது துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது விஷாலின் திருமணம் தான் பேசு பொருளாக இருக்கிறது. இவர் நடிகை சாய் தல்சிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். சாய் தன்ஷிகா நடித்த யோகிடா திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் தனது திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அப்போது இவர் நடித்த மதகஜராஜா பட வெற்றியை பற்றி பேசும்பொழுது மதகஜராஜா படம் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல தடைகளை தாண்டி அந்த படத்தை வெளியிட்டோம். படம் வெளியான பிறகு ஒரு தியேட்டர் ஓனர் அப்படத்தில் நான் பாடிய பாடலைக் கேட்கவே ஆடியன்ஸ் திரும்ப வருகிறார்கள் என்று கூறினார். அதை கேட்டவுடன் எனக்கு கலிகாலம் என்றுதான் தோன்றியது. என்னுடைய குரலையும் மதித்து வருகிறார்களா என்று ஆச்சர்யப்பட்டேன் என்று பகிர்ந்து இருக்கிறார் விஷால்.