இந்தியாவை அவ்வளவு சீக்கிரம் தொட்டுவிட முடியுமா? அபிஜித் போன்ற சுண்டைக்காய் கரப்பான்பூச்சியை வைத்து இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா? உனக்கெல்லாம் எங்க மீடியாவுக்கே பதில் சொல்ல முடியாது.. சட்டத்தை மதிக்க மாட்டீங்க.. ரூல்ஸை ஃபாலோ பண்ண மாட்டீங்க, உங்களை கைது செய்யாம போலீஸ் கொஞ்சுமா என்ன ? இதுவரைக்கும் அசிங்கப்பட்டது போதும், போய் அமெரிக்காவுக்கு போய் உன் ஓனர்கிட்ட சொல்லு, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மாதிரி இந்தியாவிடம் உங்க பாச்சா பலிக்காதுன்னு…
சமூக வலைத்தளங்களில் தாங்கள் தான் நாட்டைக் காக்கும் போராளிகள் போலவும், மிகப்பெரிய மக்கள் சக்திகள் போலவும் மக்களிடம் பில்டப் கொடுத்துத் திரிந்த சி.ஜே.பி அமைப்பின் நிர்வாகிகளுக்கு, ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நேர்ந்த அவமானம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற ஒரு பேட்டியின் போது, சி.ஜே.பி அமைப்பின் முக்கிய முகமான அபிஜித் டிப்கே செய்தியாளர்களின் நேரடியான மற்றும் கூர்மையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி போய் நின்ற சம்பவம், அவர்களின் போலி முகத்திரையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஊடகங்களின் இந்த அதிரடியான கேள்விக்கணைகளுக்கு முன்பு நிற்க முடியாமல் அவர் வாயடைத்து போன விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட தங்கள் அமைப்பை சேர்ந்த அசுதோஷ் மற்றும் சௌரவ் ஆகியோரை எதற்காக காவலில் அடைத்தீர்கள்? வெறும் கொடியை ஏந்தியதற்காகவா? என்று அபிஜித் டிப்கே செய்தியாளர்களிடம் வழக்கம்போல வழக்கமான பாணியில் குரல் எழுப்பினார். உடனே உஷாரான ஊடகவியலாளர் ஒருவர், கொடியை ஏந்தியதற்காக அவர்கள் கைது செய்யப்படவில்லை; மாறாக, நீங்கள் மூன்று பேரும் காவல்துறையினரிடம் கையெழுத்திட்ட அமைதிக்கான உறுதிமொழி பத்திரத்தை மீறியதற்காகத்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சம்மட்டி அடி கொடுத்தார். சட்ட விதிகளை மீறிவிட்டு, இப்போது அப்பாவி வேடம் போடுவதை ஊடகங்கள் அங்கே தோலுரித்துக் காட்டின.
அதற்குப் பதிலளித்த அபிஜித் டிப்கே, “நாங்கள் எந்த பத்திரத்தில் கையெழுத்திட்டோம்? எங்களது போராட்ட இடத்தை அவர்கள் பறித்துகொண்டார்கள், பிறகு நாங்கள் எப்படி எதிர்ப்பை காட்டாமல் இருக்க முடியும்?” என்று முழங்கினார். உடனே இடைமறித்த ஊடகவியலாளர், “நீங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால், எதற்காக அந்த அமைதி பத்திரத்தில் கையெழுத்திட்டீர்கள்? உங்கள் வார்த்தைகளில் உங்களுக்கு உறுதியில்லாமல் போனது ஏன்? காவல்துறை உங்களிடம் இன்னும் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறது. ஆனால், வெறும் 50,000 ரூபாய் அபராத தொகை என்பது உங்களை போன்றவர்களுக்கு மிகவும் குறைவான தொகையாக இருப்பதால் தான், கையெழுத்திட்ட ஒரே நாளிலேயே அந்த நிபந்தனையை லாவகமாக மீறிவிட்டீர்கள் போலிருக்கிறது” என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
ஊடகவியலாளரின் இந்த எதிர்பாராத மற்றும் கூர்மையான கேள்வியை எதிர்பார்க்காத அபிஜித் டிப்கே, நிலைகுலைந்து போய் நின்றார். தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அவர், சமாளிக்கும் விதமாக அந்த செய்தியாளரைப் பார்த்து, “நீங்கள் எந்த செய்தித் சேனலை சேர்ந்தவர்?” என்று எதிர்த்து கேள்வி கேட்டு மிரட்ட முயன்றார். ஆனால், சற்றும் அஞ்சாத அந்த ஊடகவியலாளர், “ஏன்? உங்களது ஆடம்பர சொத்துக்களை பற்றி மேடையில் வந்து காட்டிவிட்டு, 50,000 ரூபாய் எல்லாம் எங்களுக்கு பத்தாது என்று நிரூபிக்கப் போகிறீர்களா?” என்று மீண்டும் ஒரு நறுக்குத் தெறித்தாற்போன்ற கேள்வியை வீசினார்.
இந்த ஒற்றைக் கேள்வியில் முற்றிலுமாக உறைந்து போன அபிஜித் டிப்கே, என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே சிலையாக நின்றார். இதனை கண்ட அங்கிருந்த மற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் உரக்க சிரித்து, அவரது இரட்டை வேடத்தை கிண்டல் செய்தனர். சோசியல் மீளையாவுல வேண்டுமென்றே பொய்யான கதைகளை கட்டியமைத்து மக்களை ஏமாற்ற முயலும் இது போன்ற போலி அமைப்புகளையும், தலைவர்களையும் உண்மையான ஊடகங்கள் எப்போதுமே விட்டுவைக்காது என்பதற்கு இந்த சம்பவமே மிகச்சிறந்த சான்றாகும்.
போலியான விளம்பரங்களையும், மிரட்டல் அரசியலையும் மட்டுமே நம்பி திரியும் நபர்களுக்கு உண்மையான கள உண்மைகளும், விழிப்புணர்வுள்ள ஊடகங்களும் எப்போதுமே சிம்ம சொப்பனமாகத்தான் விளங்கும். நீதிமன்ற விதிகளை மீறிவிட்டு, சட்டம் தன் கடமையை செய்யும்போது அதற்கு எதிராக குரல் கொடுக்கும் மலிவான அரசியலுக்கு ஊடகங்கள் அன்னைக்கே சாவுமணி அடித்துவிட்டன. இந்த சம்பவத்தின் மூலம், உண்மையான ஊடகத்துறையின் பலத்தின் முன்னால் போலியான ஆன்லைன் பிம்பங்கள் எவ்வளவு பலவீனமானவை என்பது நாடறிய வெட்டவெளிச்சமாகியுள்ளது.





