கோலமாவு கோகிலா – 2… பிளாக் காமெடிக்கு தயாராகும் நெல்சன்!

நெல்சன் தொலைக்காட்சியில் இருந்து இயக்குனராக முயற்சித்த போது, சிம்பு தான் முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்த அந்தப்படத்தின் பெயர் ‘வேட்டை மன்னன்’.

படத்தின் முதல் பாதி எடுக்கப்பட்ட நிலையில், எதோ ஒரு காரணத்தால், மீதி படப்பிடிப்பு தடைபட்டது. பின், நீண்ட காலம் வாய்ப்புக்காக காத்திருந்த நெல்சனுக்கு நயன்தாராவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயினை மையமாக கொண்ட படம் என்பதால், நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்.

அப்படி, உருவான படம் தான் ‘கோலமாவு கோகிலா’. அந்தப்படம் நெல்சனின் சினிமா பயணத்திற்கு அச்சாணியாக அமைந்தது. நெல்சன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த போது அங்கு உடன் பணிபுரிந்தவர்தான் சிவகார்த்திகேயன்.

இருவருக்கும் அப்போதிலிருந்தே நல்ல நட்பு இருந்து வந்தது. கோலமாவு கோகிலா-விற்கு பிறகு படங்கள் ஏதுவும் இயக்காமல் இருந்த நெல்சனுக்கு, சிவகார்த்திகேயன் உடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ்லி இணைந்து நடித்த படம் ‘டாக்டர்’.

இந்தப்படம் கோவிட்-19 லாக்டவுனில் மாட்டிக்கொண்டதால், ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே போனது. இருப்பினும், லாக்டவுனுக்கு தளர்வு வழங்கப்பட்ட சமயத்தில் ‘டாக்டர்’ வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் தியேட்டரில் வந்து ரசிக்கும் படியான படமாக ‘டாக்டர்’ அமைந்தது.

வசூல் சாதனையும் படைத்தது. அதன் பின் தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பினை பெற்றார் நெல்சன். ‘பீஸ்ட்’ படம் நெல்சனின் வழக்கமான பாணியிலிருந்து விலகியதால், சற்று சரிவை சந்தித்தது. நெல்சனின் படங்களில் வழக்கமாக இருப்பது ஒரு டிராவல், அதில் நடக்கும் கலாட்டா என படம் அலுப்பில்லாமல் போகும். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ இந்த இரண்டு படங்களிலுமே அது சரியாக அமைந்திருக்கும்.

‘பீஸ்ட்’ படத்தில் மால் ஹைஜேக் என ஒரே இடத்தில் கூடிவிட்டதால், படத்தின் சுவாரசியமான எலிமெண்ட் அடிபட்டு போனது. இதுவே ‘பீஸ்ட்’-ன் தோல்விக்கு காரணமாக அமைந்தது. தயாரிப்பாளர்கள் தரப்பில் வசூல் ரீதியாக ‘பீஸ்ட்’ தோல்வி இல்லை எனக் கூறினாலும், படம் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியைதான் அளித்தது. பீஸ்ட் படத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பினை பெற்றார் நெல்சன்.

nelson 1

இருப்பினும், பீஸ்ட் முடிந்த பின்பே சூப்பர்ஸ்டாரின் படத்திற்கான வாய்ப்பு கூடி வந்தது. ‘பீஸ்ட்’ தோல்வியினால், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நெல்சன் நிச்சயம் வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ‘ஜெயிலர்’ ஹிட் அடித்ததால், நெல்சனுக்கு நல்ல நேரமாக அமைந்தது. தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி விட்டார் நெல்சன். முதன் முதலில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இரண்டாம் பாகம் தான் நெல்சனின் அடுத்தப்படம் என உறுதி செய்யப்பட்டு விட்டது. மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து பிளாக் காமெடி கான்செப்ட்டில் மிரட்ட தயாராகி விட்டார் நெல்சன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...