நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்…! ஜூலை 18

நெல்சன் மண்டேலா உலகத் தலைவர்களில் மிக முக்கியமானவர். தென் ஆப்பிரிக்காவில் இருந்த நிறவெறி ஆட்சி முறையை எதிர்த்துப் போராடி, 27 முறை சிறை சென்று பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் தலைவர் நெல்சன் மண்டேலா. நெல்சன் மண்டேலா பிறந்த தினமானது (ஜூலை 18) ஆண்டுதோறும் நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் நெல்சன் மண்டேலா பற்றிய சில முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபராக 1994 முதல் 1999 வரை இருந்தார். தென்னாப்பிரிக்காவின் அதிபரான முதல் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் நெல்சன் மண்டேலா அவர்கள்தான்.

images 4 17

நெல்சன் மண்டேலாவின் அரசாங்கம் நிறப் பிரிவினைக்கு எதிரான சட்டத்தையும் நிறப் பிரிவினையையும் கடுமையாக எதிர்த்தது.

நெல்சன் மண்டேலா சட்டம் பயின்றவர். முதல் கருப்பர் இன வழக்கறிஞரும் இவர்தான்.

1950ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் விடுதலை இயக்கத்தில் இளைஞர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

images 4 19

இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அமைதியான அஹிம்சை வழியை தேர்ந்தெடுத்தார் மண்டேலா. அதன் பின் அடக்கு முறை ஆட்சியில் ஏற்படும் வன்முறையை எதிர்ப்பதற்காக ஆயுதமேங்கிய இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார்.

1990 வரை தேச துரோகம்,  அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் சட்டபூர்வ இயக்கம் ஆக்கப்படுவதற்கு முன்கூட்டியே விடுதலை ஆனார்.

மண்டேலா சிறையில் இருந்த பொழுது கூட ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதற்கு அணி திரள அடையாளமாய் திகழ்ந்தார்.

மண்டேலா நவீன தென் ஆப்பிரிக்காவின் தந்தையாக திகழ்கிறார். தென் ஆப்ரிக்காவில் அடக்குமுறை ஆட்சி ஒழிந்து மக்களாட்சி ஏற்பட மண்டேலா மிகப்பெரிய காரண கர்த்தாவாகும்.

1993 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை மண்டேலா பெற்றார். நோபல் பரிசு உட்பட 250 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

images 4 21

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு மண்டேலா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் HIV தொற்று உள்ளவர்களுக்காகவும் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.

ஐக்கிய நாடுகள் சபை 2009 ஆம் ஆண்டிலிருந்து மண்டேலாவின் பிறந்தநாளான ஜூலை 18ஆம் தேதியை நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் என கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. மண்டேலாவின் 67 ஆண்டு கால சாதனைகளை போற்றும் வகையில் மண்டேலா தினத்தன்று குறைந்தது 67 நிமிடங்களாவது மற்றவர்களுக்கு நல்லது செய்வதில் செலவிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews