சசிகுமார் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. ஓஹோவென ஹிட் ஆகிய படத்தை மிஸ் பண்ணிய லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் அரிவாள் கலாச்சாரத்தை துவக்கி வைத்த படம் சுப்ரமணியபுரம். அதற்கு முன் பல படங்கள் வெட்டு, குத்து பாணியை படம் எடுத்தாலும் ரத்தம் தெறிக்க வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக சுப்ரமணியபுரம் அமைந்திருக்கும். இயக்குனர் பாலாவின் உதவியாளராக இருந்து சேது உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு தனது சொந்த தயாரிப்பில் சசிகுமார் இயக்கி நடித்த படம் தான் சுப்ரமணியபுரம். 2008-ல்வெளியான இந்தப் படம் மதுரை கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்டது.

கதையானது 1980 களில் நடைபெறுவது போன்று படமாக்கப்பட்டிருக்கும். மேலும் ஒளிப்பதிவும், கலையும் நம்மை 1980 களுக்கே அழைத்துச் செல்லும். முதல் படத்திலேயே நட்பிற்காக உயிரையே கொடுக்கும் படத்தில் நடித்த சசிகுமார் அதன் பின் வந்த பெரும்பாலான படங்களில் நட்புக்கு முன்னுரிமை கொடுத்து நடித்ததால் இவர் நண்பேன்டா நாயகனாக திரையுலகில் அறியப்பட்டார். அதுவரை இரண்டாம் நாயகனாக நடித்த ஜெய் இந்தப்படத்தில் முன்னணி ஹீரோவாக நடித்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 65 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட 30கோடி வரை வசூலித்தது. திரைக்கதையும் புத்தகமாக வந்தது.

படத்தின் இசை ஜேம்ஸ் வசந்தன். அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கினார். குறிப்பாக கண்கள் இரண்டால் பாடல் இளைஞர்களின் ரிங்க்டோனாக அப்போது ஒலித்தது. இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்ட படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சுவாதி. அனால் சுவாதிக்கு முன்னர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? லேடி சூப்பர் ஸ்டார் என்று நாம் கொண்டாடும் நயன்தாரா தான்.

ரஜினி, கமலுக்கு தந்தையாக நடித்த பிரபலம்.. இத்தனை திறமையான நடிகரா? மலையாள தேசத்தின் மூத்த கலைஞர் மது!

இயக்குனர் சசிகுமார் இந்தக் கதையை நயன்தாராவிற்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் அப்போது நயன்தாரா ‘சந்திரமுகி’ ஹிட்டால் பல படங்களில் புக் ஆனார். மேலும் புதுமுகங்கள் நடிக்கும் படத்தில் நடித்தால் தனது மார்க்கெட் போய்விடும் என்று நோ சொல்லியிருக்கிறார். ஆனால் சசிகுமார் மீண்டும் அவரை நாட மூஞ்சில் அடித்தாற்போல் வேண்டாம் என மறுத்திருக்கிறார். அதன் பிறகே சுவாதி கமிட் ஆனார். ஆனால் படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

எந்த நயன்தாரா இயக்குனர் சசிகுமார் வாய்ப்பை நிராகரித்தாரோ இப்போது அவரே சசிகுமாருடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...