ரஜினி, கமலுக்கு தந்தையாக நடித்த பிரபலம்.. இத்தனை திறமையான நடிகரா? மலையாள தேசத்தின் மூத்த கலைஞர் மது!

இன்று ஆடு ஜீவிதம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் என்று மலையாள சினிமாவைக் கொண்டாடும் தமிழ் ரசிகர்களுக்கும் மம்முட்டி, மோகன் லால் என பிரபல நடிகர்களை மட்டுமே தெரிந்திருந்த நமக்கு பரிச்சயம் ஆகாத ஒரு மலையாள நடிகர் தான் மாதவ நாயர் என்கிற மது. இவரை எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் தர்மதுரை படத்தில் ரஜினியின் அப்பாவாக நடித்தாரே அவர்தான் இந்த மது.

90 வயதை தாண்டிய மது மலையாள சினிமாவின் மூத்த கலைஞர். மலையாள தேசத்தின் எவர் க்ரீன் ஹிட் படமான செம்மீன் படத்தின் பாரிக்குட்டி என்ற மீனவ இளைஞராக நடித்து தென்னிந்திய மக்கள் மனதில் பதித்தவர். கிட்டத்தட்ட 12 திரைப்படங்கள் இயக்கியும், 15 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்தும், 400 படங்களுக்குக் மேல் நடித்தும் மலையாள சினிமா உலகில் நம்மூர் சிவக்குமார் போன்று கொடிகட்டிப் பறந்தவர். தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் மொழி பிரச்சனையால் அதிக படங்களில் நடிக்கவில்லை. கமல்ஹாசனுக்கு மலையாளத்தில் ஈட்டா என்ற படத்தில் தந்தையாக நடித்துள்ளார் மது.

‘மாடர்ன் ரகுவரன்’ டேனியல் பாலாஜி.. உலகை விட்டு மறைந்தாலும் உயிர்வாழும் நீங்கா படைப்புகள்

மலையாளத்தில் ஒரு முள்ளும் மலரும் படமாக உருவாகிய வேனலில் ஒரு மழா என்ற படத்தில் ரஜினியின் காளி கதாபாத்திரத்தை அப்படியே பிரதி பலித்தவர்.  ரஜினியின் பல திரைப்படங்களில் ரஜினிக்கு தாயார் மட்டும் இருப்பர், அல்லது அக்கா இருப்பார், ஆனால் தர்மதுரை என்ற கதாபாத்திரத்திற்கு அப்படி வலு சேர்ப்பது போல இந்த தந்தை கதாபாத்திரத்தை புனைந்திருந்தார்.  மேலும் பாரத விலாஸ் படத்திலும் நடித்திருப்பார். தமிழில் கடைசியாக ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தில் நடித்தார்.
இது மட்டுமல்லாது மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் வாழும் பெண்களில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக ப்ரியா என்ற படத்தைக் கொடுத்து 1970ல் இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படமாக விருது பெற்றவர்.

மேலும் மது, “இதா இவிட வரெ ” என்ற திரைப்படத்தில் கொடிய வில்லன் கதாபாத்திரமான தாராவுக்காரன் பைலியாகவே வாழ்ந்திருப்பார். இப்படி ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் போன்ற அனைத்திலும் அசத்தி வந்த மதுவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...