வேற லெவலில் ‘கனெக்ட்’ திரைப்படம்: டுவிட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்!

நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

நயன்தாரா நடிப்பில் மாயா இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’ . இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் உச்சகட்டத்தில் இருந்தபோது உள்ள கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் மிகச்சிறந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது என்றும் நயன்தாரா மீண்டும் தான் ஒரு திறமையான நடிகை என்பதை நிரூபித்து உள்ளதாகவும் டுவிட்டரில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

nayanthara_connectஆங்கிலத் திரைப் படங்களுக்கு இணையாக ஒவ்வொரு காட்சியும் இருக்கிறது என்றும் திரில்லர் படம் என்ற பெயரில் காமெடி படத்தை இயக்கி வரும் இயக்குனர்கள் மத்தியில் அஸ்வின் மிகச்சிறந்த ஒரு திரில்லர் படத்தை இயக்கி உள்ளார் என்றும் டுவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முழுக்க முழுக்க நயன்தாரா ஆரம்பம் முதல் கடைசி வரை வருகிறார் என்றும் அவர் ஒரு இடத்தில் கூட நடிப்பில் ஏமாற்றவில்லை என்றும் இந்த படத்திற்கு மிகச்சிறந்த பக்கபலமாக பின்னணி இசை இருக்கிறது என்றும் குறிப்பாக பேய் காட்சிகள் வரும்போது காதை மூடிக் கொள்ளும் அளவுக்கு பின்னணி இசை மிரட்டி உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.