சொந்த நிறுவனத்திற்கு மட்டும் புரோமோஷன் செய்யும் நயன்தாரா… அப்செட்டாகும் தயாரிப்பாளர்கள்!

நடிகை நயன்தாரா தனது 2வது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.

சினிமா துறையில், நடிகைகள் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைப்பது சாதாரண காரியமில்லை. ஒரு சிலருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கும், தற்போது அந்த அதிர்ஷ்டம் நடிகை நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. தமிழில் 2005ம் ஆண்டில் வெளியான ‘ஐயா’ படம் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து 2வது படத்திலேயே சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். பின்பு, கஜினி, கள்வனின் காதலி, ஈ, வல்லவன், பில்லா என பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாகவே திகழ்ந்து வந்தார்.

அந்த சமயத்தில் சிம்பு உடன் நயன்தாரா காதலில் இருந்தாதாக கூறப்பட்ட நிலையில், சில வருடங்களிலே அந்த காதல் முடிவுக்கு வந்தது. பின், விஜய்யுடன் ‘வில்லு’ படத்தில் நடத்தபோது அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் பிரிவை நோக்கி நகர்ந்தனர். பின் சினிமாவில் இருந்து விலகி நயன்தாரா. அட்லி இயக்கத்தில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

நயன்தாரவின் ரீ எண்ட்ரி ராஜா ராணி படத்தின் மூலம் சிகப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்தது. ஹீரோயின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். ஒருசில படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், அவருக்கான இடம் அவரது வசீகரத்தாலும், நடிப்பாலும் பறிபோகவில்லை. பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படம் நயன்தாராவின் ஆக்டிங் திறனை வெளிக்காட்ட உதவியது.

இதன் பின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா. 2022ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நயன்தாரா ஒருசில விருது வழங்கும் விழாக்களில் மட்டுமே பங்கேற்று வருகிறார். தான் நடிக்கும் படங்களுக்கான ஆடியோ வெளியீட்டு விழாவிலோ அல்லது பட புரோமோஷன் நிகழ்ச்சிகளிலோ அவர் பங்கேற்பதில்லை என்பது பட தயாரிப்பாளர்களின் புலம்பலாக இருந்து வருகிறது.

9 thars

இந்நிலையில், சமீபத்தில் மலேசியாவில் தன்னுடைய 9skin பியூட்டி புராடெக்ட்களின் அறிமுக விழாவில் கணவர் விக்னேஷ் சிவனுடன் பங்கேற்றிருந்தார் நயன்தாரா. இது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தான் சொந்த பணத்தை செலவு செய்து ஆரம்பிக்கும் நிறுவனத்திற்கும் மட்டும் புரோமோஷன்களுக்கு இறக்கை கட்டி பறக்கும் நயன்தாரா, தயாரிப்பாளர்கள் லாபம் பெற தன்னுடைய பங்களிப்பை கொடுத்து பட புரோமோஷன்களில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பதில்லை என கூறப்படுகிறது. தன்னுடைய கொள்கையை இனியாவது மாற்றி தயாரிப்பாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பட நிகழ்வுகளில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews