அன்று உதாசீனப்படுத்திய நயன்தாரா… இப்போது அவரிடமே நிற்க வேண்டிய நிலை… இதெல்லாம் அம்மணிக்குத் தேவையா?

தமிழ்த்திரை உலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது 75 திரைப்படங்களில் நடித்து விட்டார். அவருக்கு கடைசியாக வந்தப் படங்களில் நல்ல பேர் வாங்கிக் கொடுத்த படம் பில்லா. அஜீத் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்த்தன்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையாக நயன்தாராவும் ஒரு ஸ்டைலான லுக்கில் வந்து அசத்துவார். இதன்பிறகு இவருக்குப் பல படவாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன. அப்போது தான் சசிக்குமார் சுப்பிரமணியபுரம் படத்தைத் தொடங்கினார்.

இதையும் படிங்க… கணவருக்கு செம டஃப் கொடுத்த ஜோதிகா!.. வொர்க்கவுட் வீடியோவை பார்த்து உறைந்து போன ஃபேன்ஸ்!..

அந்த சமயத்தில் ஹீரோவாக ஜெய்யை முடிவு செய்து விட்டார். ஆனால் கதைப்படி அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துள்ளார். அதனால் நேராக அவரிடமே போய்க் கேட்டுள்ளார். நயன்தாராவின் மார்க்கெட் அப்போது உச்சத்தில் இருந்தது. அவர் என்ன நினைத்தார் என்றால், சசிக்குமார் புது முக இயக்குனர்.

நடிகர் ஜெய்யும் புதுமுகம். இந்தக் கூட்டணியுடன் சேர்ந்தால் நம் மார்க்கெட் காலியாகி விடக்கூடாதே என்று நினைத்தாராம். அதனால் சசிக்குமார் கேட்டதற்கு முடியாது என்று டைரக்டாவே சொல்லி அனுப்பி விட்டாராம். அதன்பிறகு பல வழிகளில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து பார்த்தாராம். ஆனால் எந்தப் பலனும் இல்லையாம். இவரை உதாசீனப்படுத்தி விட்டாராம் நயன்தாரா. அதன்பிறகு அந்தக் கேரக்டரில் நடிகை சுவாதி நடித்தார்.

Subramaniyapuram
Subramaniyapuram

படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 65 லட்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 30 கோடியை குவித்தது. இதுவே நயன்தாராவுக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்து இருக்கும். இப்போது அவருக்கு முன்பு போல் மார்க்கெட் இல்லை. நடித்த படங்களும் படுதோல்வியாகி வருகின்றன. இப்போது சசிக்குமார் இயக்க உள்ள படத்திற்குத் தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

வாழ்க்கைங்கறது வட்டம்டா… இதுல மேல உள்ளவன் கீழே வருவான். கீழே உள்ளவன் மேலே வருவான்கற டயலாக் சரியாகத் தான் இருக்கிறது. அதனால் யாரையும் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது. திறமை எங்கிருக்கிறது என்பது செயலில் தான் தெரியும்.

இதையும் படிங்க… கிளாமர் கதாபாத்திரங்களால் கிடைத்த பெயர்.. குணச்சித்திர நடிகையாக மாறினாலும் தலைவிதியை மாற்றிய வழக்கு..

சுப்பிரமணியபுரத்தில் படமும் சரி. பாடல்களும் சரி. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. அதிலும் ஜெய் சுவாதி நடித்த கண்கள் இரண்டால் பாடல் இப்போது கேட்டாலும் பரவசம் தான். படத்தில் இருவரது நடிப்பும் செம மாஸாக இருக்கும். கிடைக்கும் போது வர்ற வாய்ப்பை நழுவ விட்ட பின் வட போச்சே என ஃபீல் பண்ணுவது சரியல்ல.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews