கணவருக்கு செம டஃப் கொடுத்த ஜோதிகா!.. வொர்க்கவுட் வீடியோவை பார்த்து உறைந்து போன ஃபேன்ஸ்!..

நடிகர் சூர்யாவுக்கு கடும் டஃப் கொடுக்கும் விதமாக அவருடன் இணைந்து அனைத்து கடுமையான உடற்பயிற்சிகளையும் நடிகை ஜோதிகாவும் செய்து காட்டுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. பழம் பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். கோலிவுட்டை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் நடிகர் சூர்யா கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோதிகா, சூர்யா வொர்க்கவுட்:

கங்குவா படத்தை 3dயில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இயக்குனர் சிறுத்தை சிவா உருவாக்கி வருகிறார். அந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தில் சூர்யாவும் அக்‌ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ளார். அந்த படத்தை தயாரித்து இருப்பதும் சூர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே ஃபிட்னஸ் ஃப்ரீக்கான நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா நடிகையாக இருந்த ஜோதிகா மலையாளத்தில் மம்மூட்டி உடன் காதல் தி கோர் படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார்.

சபாஷ் சரியான போட்டி:

பாலிவுட்டில் கடந்த மாதம் வெளியான சைத்தான் படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் அதிரடியாக 200 கோடி வசூலை ஈட்டியுள்ளது. த்ரெட் மில்லில் சூர்யாவும் ஜோதிகாவும் ஓடும் காட்சியில் தொடங்கி இருவரும் ரோப் கட்டிக் கொண்டு த்ரெட் மில்லில் சூர்யாவும் தரையில் ஜோதிகாவும் ஓடும் காட்சிகளும், வெயிட் லிஃப்டிங், பாக்ஸிங் பேக், மேலே ஏறுவது, தலைகீழாக தொங்குவது என பல உடற்பயிற்சிகளை செய்து அசத்துகின்றனர்.

வாடிவாசல் படத்தை இன்னமும் ஆரம்பிக்காத நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் அறிவித்த புறநானூறு படத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தி கர்ணன் படத்தில் இருந்தும் சூர்யா விலகி விட்டாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஜோதிகா நடிப்பில் விரைவில் டப்பா கார்ட்டல் எனும் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.