மலேசியப் பெண்ணை நம்பி மோசம் போன பிரபல நடிகர்.. நிம்மதி, பணத்தை இழந்த பரிதாபம்..

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ஜீன்ஸ் படத்திற்குப் பிறகு புதுமுகங்களை வைத்து 2003-ம் ஆண்டில் பாய்ஸ் என்ற படத்தினை இயக்கினார். இந்தப்படத்தின் மூலம் சித்தார்த், ஜெனிலியா, பரத், மணிகண்டன், நகுல், தமன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமானர். படம் வெளியாகி பல சர்ச்சைகளைச் சந்தித்து வெற்றி பெற்றது.

இதில் புதுமுகமாக நடித்த 6 பேரில் மணிகண்டனைத் தவிர ஒவ்வொருவரும் தற்போது இன்னும் திரைத்துறையில் பல நல்ல படங்களைக் கொடுத்து வருகின்றனர். தமன் இசைமைப்பாளராக கலக்கி வருகிறார். ஆனால் இவர்களுடன் நடித்த மணிகண்டன் அதன் பின்சில படங்கள் மட்டுமே நடித்து காணாமல் போனார்.

கலா மாஸ்டரிடம் குரூப் டான்ஸராகவும், மிமிக்ரி கலைஞராகவும் இருந்த மணிகண்டனின் திறமையைப் பார்த்த ஷங்கர் பாய்ஸ் படத்தில் வாய்ப்புக் கொடுத்துள்ளார். ஆனால் அதற்குப் பின் காதல் எப்.எம்., கிச்சா வயசு 16 போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இந்தப் படங்கள் சரியாக ஓடாததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்டார். மேலும் தகாத பழக்கங்களுக்கும் ஆளானார். அப்போது சமூக வலைதளம் மூலம் மலேசியாவில் ஒரு பெண் அறிமுகம் கிடைக்க அவருடன் ஆன்லைனிலேயே சில காலம் பொழுதைக் கழித்தார்.

“உங்க வேலைய மட்டும் பாருங்க.. இனிமேல் இளையராஜாவை சீண்டுனா..” வைரமுத்துவுக்கு எதிராக கோபத்தில் பொங்கிய கங்கை அமரன்

ஒருகட்டத்தில் அந்தப் பெண் இவரை மலேசியாவிற்கு அழைக்க இவரும் கை நிறைய பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு மலேசியா என்று அங்கே அந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். ஆனால் காதலிக்கவில்லை. உடல் இச்சைக்காகவே சென்றுள்ளார். (ஷகிலாவுடனான பேட்டியில் இதை அவரே கூறியுள்ளார்.) இப்படி அங்கு அந்தப் பெண்ணுடன் சிறிது நாட்கள் தங்கிவிட்டு தன்னிடம் இருந்த நகை, பணம் உள்ளிட்ட அனைத்தையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு பின்னர் திரும்பியிருக்கிறார்.

இந்தியா வந்தவுடன் அந்தப் பெண்ணும் இவரைக் கழட்டிவிட நாளடைவில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். தற்போது 43 வயதாகும் மணிகண்டன் அதிலிருந்து மீண்டு வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகல நல்ல படவாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். சரியான வாய்ப்புகளின்றி, வாழ்க்கையில் தடுமாறி தன் வாழ்க்கைச் சம்பவங்களை நடிகை ஷகீலாவுடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் மணிகண்டன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...