கிளைமாக்ஸ் மாற்றப்பட்ட முதல் தமிழ் சினிமா.. விதை போட்ட தமிழ் சினிமாவின் தந்தை.. 1936-ல நடந்த மேஜிக்!

ஒரு திரைப்படம் வெளியாகும் சமயத்தில் அதன் மீது விமர்சனம் வைக்கப்படுவது என்பது இயல்பான விஷயம் தான். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் திரைப்படங்கள், சில நேரங்களில் அதிகமாக நெகடிவ் விமர்சனங்களை பெறுவதுண்டு.

மறுபக்கம், எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியாகும் திரைப்படங்கள், நினைத்ததை விட பெரிய அளவில் ரசிகர்களை அசர வைக்கும். பெரும்பாலான திரைப்படங்களை இந்த ரெண்டு வகையில் நிச்சயம் அடைத்து விடலாம். ஒரு வேளை, வெளியாகும் திரைப்படத்தின் நெகடிவ் விமர்சனமாக கிளைமாக்ஸ் அல்லது படத்தின் நீளத்தை சொல்வார்கள். படத்தின் நீளத்தை சொல்லும் சமயத்தில் சிலர் படத்தில் சில காட்சிகளை வெட்டி நேரத்தை குறைத்து புதிய வெர்ஷனை திரையரங்குகளில் வெளியிடுவார்கள்.

மேலும் படத்தின் இடைவேளை வரை மக்கள் படத்தை பாராட்டி இருந்தாலும் இறுதியில் அவர்கள் படத்தை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்பதும் மிக மிக முக்கியம். அதனால், படத்தின் முடிவை மிகவும் கச்சிதமான உருவாக்க தான் எந்த சினிமா கலைஞர்களும் நினைப்பார்கள். அந்த வகையில், வேட்டையாடு விளையாடு, கிரீடம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களின் இறுதிக் காட்சிகள் ரசிகர்களுக்காக மாற்றப்படவும் செய்தது.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ரிலீசான முதல் திரைப்படம் எது என்பது குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

கடந்த 1936 ஆம் ஆண்டு, கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளியான திரைப்பட ‘நவீன சாரங்கதரா’. இந்த திரைப்படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர், எஸ்.டி. சுப்புலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். மொத்தம் 41 பாடல்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
1936 movie

தெலுங்கில் பிரபல புராண கதையான சாரங்கதராவை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த புராண கதைப்படி, சித்ராங்கி என்ற இளவரசியை மணமுடிக்க பல இளவரசர்கள் ஓவியங்கள் அவருக்கு காண்பிக்கப்படுகிறது. இதில் சாரங்கதர் என்ற இளவரசனை சித்ராங்கிக்கு பிடித்து போக, திருமணத்திற்கும் சம்மதம் தெரிவிக்கிறார். மேலும் திருமண நேரத்தில் சாரங்கதர் யுத்தக் களத்தில் இருந்ததால் மரபுப்படி, அவரது வீர வாளுக்கு மணப்பெண் மாலையிட வேண்டும். ஆனால், சாரங்கதரின் தந்தை மோசமான ஒரு நபர் என்பதால், இளவரசி சித்ராங்கியை அவரே மணமுடிக்க ஏற்பாடு செய்து அதை நிறைவேற்றவும் செய்கிறார்.

பின்னர் யுத்தக் களத்தில் இருந்து வந்த சாரங்கதர் அதிர்ச்சியடைந்து போகிறார். மேலும், தனது சித்தியான சித்ராங்கியை மனைவியாக பார்க்கவும் எண்ணாத சூழலில், அவரின் தந்தையிடம் அவரை பற்றி தவறாக போட்டுக் கொடுக்கிறார் சித்ராங்கி. இதனால் கோபமடைந்த சாரங்கதர் தந்தை, மகன் என்றும் பாராமல் மாறு கால், மாறு கை வாங்கி விடுகிறார். இதனால் மனம் உடைந்த சித்ராங்கி தற்கொலை செய்து கொள்கிறார்.

நவீன சாரங்கதாரா வெளியாவதற்கு முன், அதே புராணக் கதையை மையப்படுத்தி வெளியான சாரங்கதரா என்ற திரைப்படம் தோல்வி அடைந்தது. அதன் காரணத்தை ஆராய்ந்த கே. சுப்பிரமணியம், கை, கால் வெட்டப்பட்ட சாரங்கதருக்கு ஒரு புத்த துறவி கை, கால்களை கொடுப்பது போன்றும், தன் தவறை உணர்ந்த சாரங்கதரின் தந்தை, மகனுக்கும் சித்ராங்கிக்கும் திருமணத்தை நடத்தி வைப்பது போன்றும் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி படம் பிடித்து ரிலீஸ் செய்தார். மேலும் அந்த திரைப்படம், எதிர்பார்த்த அளவை விட பெரிய வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...