பெண்களின் கையில் எப்போதும் காசு புரள வேண்டுமா? அப்படின்னா இதை மட்டும் செய்தால் போதும்…!

நவராத்திரி 5ம் நாளான இன்று (19.10.2023) அன்று மகாலெட்சுமியை வழிபடக்கூடிய 3 நாளில் இன்று 2 வது நாள். மோகினி என்றும் வைஷ்ணவி என்றும் அழைப்பர். இவர் வேறு யாருமல்ல. விஷ்ணுவின் தர்மபத்தினி தான். இது ஒரு அழகான கோலம்.

Mohini devi 3
Mohini devi

வைஷ்ணவ தேவி கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறாள். பெயரை சொல்லி அழைக்கும் முன்பே நம் பிரச்சனைகளைத் தீர்க்க ஓடி வருகிறாள். இவள் மோகினி ஆதலால் மயக்கம் தரக்கூடிய பிரச்சனைகளுக்கும் விடுதலை தருகிறார். வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சனைகள் மாறி மாறித் தான் வருகிறது.

அது ஒரு மயக்க நிலைக்கு நம்மைத் தள்ளி விடுகிறது. அதனால் பிரச்சனைகளால் உண்டாகும் துயர்களையும், துன்பங்களையும் நீக்கி கேட்ட வரத்தைத் தருகிறாள் வைஷ்ணவி. பொருள் விரயத்தை நீக்கி அதைத் தங்கச் செய்கிறாள்.

எங்க வீட்டுல தண்ணி மாதிரி காசு செலவாகுதுன்னு சொல்வாங்க. அதனால் வந்த பொருள் தங்குவதற்கும் வழிபட வேண்டும். அதற்கு இந்த வைஷ்ணவதேவி உறுதுணையாக இருப்பாள். சிலர் பொருள்களை வாங்குவது பற்றித் திட்டம் போடுவர். அதற்கு சுபவிரயம் என்பர். அது விரயமானாலும் அந்தப் பொருள் நமக்குப் பிற்காலத்தில் உதவும். பிரச்சனைகளுக்கேக் காசு செலவானால் அதற்கு அசுபவிரயம்.

செல்வம் சேர்த்தால் கூட அதை அனுபவிப்பதற்;கு என்று ஒரு யோகம் வேண்டும். அதனால் சம்பாதித்த பொருளை நாம் அனுபவிப்பதற்கும், நம் குழந்தைகளுக்குக் கொடுத்துட்டுப் போறதுக்கும் அருள் வேணும். அந்த அருளைத் தருபவள் மோகினி தான். நேற்று செல்வத்தை வாரி வழங்கினாள் மகாலெட்சுமி. இன்று அதைக் காக்க வந்து இருக்கிறாள் வைஷ்ணவ தேவி.

Vaishno devi
Vaishno devi

தும்ப, விசும்பர்களிடையே போருக்காக தூது புறப்பட்ட நாளாகவும் இன்றைய நாள் சொல்லப்படுகிறது. உலக மாயைகளில் இருந்து விடுதலை தருபவளாக வைஷ்ணவதேவி நமக்கு விளங்குகிறாள். மனோரஞ்சிதம், பாரிஜாதம் இன்றைக்கு உகந்த மலர்கள். திருநீற்றுப் பச்சை இலையைக் கொண்டு அர்ச்சிக்கலாம்.

இன்று தயிர் சாதம் நைவேத்தியமாகவும், சுண்டல் வகைகளில் பூம்பருப்பும், பழங்களில் மாதுளமும் நைவேத்தியமாக வைக்கலாம். பந்துவராளி ராகத்தில் அமைந்த பாடலைப் பாடலாம்.

கொலு வைத்தவர்கள் வழக்கம் போல பூஜை செய்யலாம். இன்றைய நாளில் வழிபடுவதால் அனைத்து வகையான செல்வ பலன்களும் கிடைக்கும்.

ஒரு பெண்ணுக்கு எப்போதுமே நிறைய காசு புழங்கிக்கிட்டு இருந்தா அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும். இல்லைன்னா அவங்களுக்கு மனசு இறுக்கமாக இருக்கும். அப்படி கையில் காசு புரள்வதற்குக் கூட யோகம் இருக்க வேண்டும்.

அதற்கு உங்க கையால யாருக்காவது ஒரு உயிருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும். யாருக்காவது தர்மம் பண்ணனும். எந்தக் கை தர்மம் செய்து கொண்டே இருக்கிறதோ அந்தக் கையில் மகாலெட்சுமி தங்கிக் கொள்வாள். காக்கைக்கு சாப்பாடு வைக்கலாம். குருவிக்கு உணவு வைக்கலாம். காலையில் அரிசி மாவில் கோலம் போடலாம். எறும்புகளுக்கு அது உணவாக இருக்கும். நாய்க்கு நம்ம கையால சாப்பாடு வைக்கலாம்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.