வாலி சொன்னது எல்லாம் பொய்… நானும் அவனும் பெரிய கேடி.. ரசிகர்கள் முன்னிலையில் போட்டுடைத்த நாகேஷ்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏராளமான கலைஞர்கள் தங்களது நடிப்புத் திறனாலும், இசை திறனாலும், இயக்கத் திறனாலும் வெகுஜன மக்களை அதிகமாக கவர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

அவர்கள் காலத்தால் மறைந்து போனாலும் அவர்களால் உருவான படைப்புகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உயிர் பெற்று நிலைத்து நிற்கும். அந்த வகையில் மிக மிக முக்கியமான ஒருவர் தான் நடிகர் நாகேஷ். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் என ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர்கள் அனைவருடனுமே இணைந்து நடித்துள்ள நாகேஷ், ஏராளமான காமெடி வேடங்களில் பட்டையைக் கிளப்பி உள்ளார். அதிலும் அவர் சிவாஜி கணேசனுடன் திருவிளையாடல் படத்தில் இணைந்து நடித்த ஒரு காட்சி போதும், நாகேஷ் ஒரு கலைஞன் என்பதை உணர்த்துவதற்கு.

இது தவிர முன்னணி நடிகராகவும் நாகேஷ் நடித்த திரைப்படங்களில் காமெடி தாண்டி தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். இதே போல ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்னர் கமல், ரஜினி, விஜய் உள்ளிட்ட பல்வேறு அடுத்த தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த நாகேஷ், குணசத்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கு முத்திரை பதித்திருந்தார்.
Nagesh - IMDb

இதனிடையே ஒரு நிகழ்ச்சி மேடையில் ரசிகர்கள் அனைவர் முன்னிலையில் மறைந்த கவிஞர் வாலி பற்றி அவர் முன்பே நாகேஷ் சொல்லிய விஷயங்கள் தற்போது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. திரைத்துறையில் தனது பாடல் வரிகள் மூலம் முக்கியமான ஒரு இடத்தை பிடித்தவர் தான் கவிஞர் வாலி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதியுள்ள வாலி, டிரெண்டிற்கு ஏற்ற வகையில் தன்னுடைய பாடல் வரிகளையும் புதுப்பித்துக் கொண்டே தான் இருந்தார்.

இதனால் இந்த காலத்து தலைமுறை இசையமைப்பாளரான அனிருத்துடன் கூட இணைந்து பணிபுரிந்திருந்தார் வாலி. இதனிடையே ஒரு நிகழ்ச்சியில் கவிஞர் வாலி பற்றி மேடையில் பேசிய நாகேஷ், “நீங்கள் பணம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அற்புதமாக பாடல் எழுதி தருவேன் என வாலி ஒருமுறை குறிப்பிட்டு இருந்தார். அது முழுக்க முழுக்க பொய்.
Best of Vaali — Remembering Vaali | by Gopalakrishnan Krishnasamy | Movie Herald | Medium

என்னைப் போன்றும், ரங்கராஜனை (வாலி) போன்றும் கால் பைசா பாக்கி இல்லாமல் சினிமா கம்பெனியில் இருந்து பணம் வாங்கியவர் சினிமா துறையில் யாருமே இருக்க மாட்டார்கள். இதுதான் சத்தியம்” என நாகேஷ் தெரிவித்ததும் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் கத்தி சிரிக்கத் தொடங்கி விட்டனர். அதே போல, தன்னை பற்றி பேசியதை கேட்டு கவிஞர் வாலியும், அவர் அருகில் இருந்த இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா உள்ளிட்டோரும் கூட நாகேஷின் மேடைப் பேச்சைக் கேட்டு வாய்விட்டு சிரிக்கவும் தொடங்கினர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.