படம் ஓடாதுனு தெரிஞ்சு போச்சு.. இமேஜ் போய்டும்னு தெரிஞ்சும்.. வடிவேலுவுக்காக ஷ்ரேயா எடுத்த ரிஸ்க்..

காமெடி நடிகராக இருக்கும் பலரும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏராளமானோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிகமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாகவும் நடிக்க தொடங்கினர். தற்போது கூட சந்தானம், வடிவேலு, சதீஷ், சூரி உள்ளிட்ட பலரும் காமெடியில் ஒரு ரவுண்டு வந்த சூழலில், பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாகவும் நடித்து கதையின் ஹீரோக்களாகவும் விளங்கி வருகின்றன.

அந்த வகையில் இந்த பட்டியலில் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருந்தவர் தான் நடிகர் வடிவேலு. சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இன்று கூட ரசிகர்கள் ரசிக்கும் படி அளவுக்கு தான் அமைந்திருந்தது. ஹீரோவாக கால் பதித்த முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் முன்னணி நாயகராக நடிக்க தொடங்கினார் வடிவேலு.

அப்படி அவர் நடித்த இரண்டாவது படம் தான் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். நடிகர் தம்பி ராமைய்யா இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படத்தில் வடிவேலுவுடன் யாமினி சர்மா, சுஜா வருணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்த நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை ஸ்ரேயா நடனமாடி இருந்தார். இந்த நிலையில் ஒரே ஒரு பாடலில் நடனமாடுவதற்காக எடுத்த முடிவுக்கான காரணம் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், “முதலில் படத்தை கொஞ்சம் எடுத்து விட்டு எடிட் செய்து பார்த்த போது காமெடி இல்லை என படத்தின் எடிட்டர் கூறினார். காமெடி படத்திலேயே காமெடி இல்லையென்றால் என்ன செய்வதென யோசித்து வடிவேலுவிடம் கேட்க, எமலோகத்தில் அதிக காமெடியை உருவாக்கி விடலாம் என அதற்காக பணம் செலவு செய்து செட் போட்டு காட்சிகள் எடுத்தோம்.

அப்போதும், படம் எடுபடாமல் போக, நிச்சயம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ஓடாது என்பதும் முதலிலேயே தெரிந்து விட்டது. இதனால், படத்தின் இமேஜையாவது அதிகரிக்கலாம் என ஒரு பாடலுக்காக ஷ்ரேயாவை ஆட வைக்கலாம் என முடிவு செய்தோம். அந்த சமயத்தில் விக்ரமுடன் கந்தசாமி படத்தில் ஷ்ரேயா நடித்து வந்ததால், வடிவேலுவின் ஒரு படத்தில் பாடலுக்கு மட்டும் ஆடினால், உன் இமேஜ் போய் விடும் என்று பலரும் ஷ்ரேயாவை எச்சரித்துள்ளனர்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி ‘கைநீட்டி பணம் வாங்கி விட்டேன். அந்த பாடலில் நடனமாடியே தீருவேன்’. அவர்களை ஏமாற்றமாட்டேன்’ எனக்கூறி எங்களுக்காக ஷ்ரேயா நடித்து கொடுத்தார்” என மாணிக்கம் நாராயணன் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...