தாயின் இறப்புக்குக் கூட போக முடியாமல் தவித்த நாகேஷ்.. சிரிக்க வைத்த கலைஞனுக்குப் பின்னால் இப்படி ஒரு சோகமா?

தனது மேனரிசத்தாலும், பாடி லாங்குவேஜாலும், துறுதுறு நடிப்பாலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் தமிழ் மக்களை சிரிக்க வைத்தவர் நாகேஷ். காமெடி, ஹீரோ, குணச்சித்திரம் எனப் பல கதாபாத்திரங்களிலும் நடித்து நீங்கா புகழைக் கொண்ட ஞானி.

60களில் முன்னணி காமெடி நடிகராக இருந்த நாகேஷ் ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிப்பார். இதனால் அவரின் வருகைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரே படப்பிடிப்பு தளங்களில் காத்திருப்பார்கள். ஏனெனில், அப்போது படங்களில் வெற்றிக்கு நாகேஷ் தேவைப்பட்டார். இப்பேற்பட்டவர் தனது தாயின் மரணத்தில் கூட பங்கேற்காத முடியாத சோகம் நிகழ்ந்துள்ளது.

‘அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..‘ இதனாலதான் இவருக்கு மேஜர் அடைமொழி வந்துச்சா..?-மேஜர் சுந்தர்ராஜன் சினி பயணம்

நாகேஷ் ஒன்றும் பணக்கார குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் இல்லை. இவரின் சொந்த ஊர் தாராபுரம். அவரின் அம்மா அங்கே தங்கியிருக்க நாகேஷ் ரயில்வேயில் வேலை செய்துகொண்டே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், வாய்ப்பு ஒன்றும் பெரிதாக இல்லை.. கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் என அடிக்கடி தன் தாய்க்கு கடிதம் எழுதுவார். கஷ்டப்பட்டு சினிமாவில் சம்பாதித்து ஒரு காரை வாங்கி கையில் 50 ஆயிரம் பணத்துடன் அம்மாவை பார்க்க தயாராகி கொண்டிருந்தார். ஆனால், அவரின் அம்மா இறந்துவிட்டதாக அவருக்கு செய்தி கிடைத்தது. அதிர்ச்சியுடனும், ஆழ்ந்த சோகத்துடனும் அழுது கொண்டே காரை எடுத்துக்கொண்டு தாராபுரம் சென்றார்.

இவர் செல்ல நேரமானதால் உறவினர்கள் காத்திருக்காமல் அவரின் அம்மாவின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றுவிட்டனர். நாகேஷ் ஊருக்குள் போனபோது ஒரு பாலம் குறுக்கிட்டது. வைக்கோல் ஏற்றப்பட்ட வண்டிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் அதனால் நாகேஷ் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்போது கரைக்கு அந்த பக்கம் அவரின் அம்மாவுக்கு வேறு ஒருவர் கொள்ளி வைத்துக்கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்து மனம் உடைந்த நாகேஷ் அம்மாவின் முகத்தை கூட பார்க்க முடியாமல் மிகுந்த சோகத்திற்கு உள்ளானார். இதனால் நாகேஷுக்கு பல நாட்கள் தூக்கம் வரவில்லை. ஆனாலும், அதிலிருந்து மீண்டு இரவு பகலாக நடித்து மீண்டும் தன்னுள் நிகழ்ந்த சோகத்தை மறைத்து மக்களைச் சிரிக்க வைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews