எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்

தெலுங்கு சினிமாவின் தற்போது நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருப்பவர் தமன். ஆனால் இவருக்கே குருவாக விளங்கியவர் இசையமைப்பாளர் மணி சர்மா. இதனை தமன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். தற்போது இசையமைப்பாளர் மணி சர்மாவிற்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகர்களிடம் தனக்கு வாய்ப்புத் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

யார் இந்த மணிசர்மா?

2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர்ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசை சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்க இவர்கள் மூவரது பாணியையும் கலந்து தனித்துவ இசையால் ரசிகர்களுக்கு விருந்தளித்தவர் மணி சர்மா. தனுஷ் நடித்த மாப்பிள்ளை, விஜய் நடித்த யூத், போக்கிரி, ஷாஜகான், சுறா, அஜீத் நடித்த ஆஞ்சநேயா போன்ற படங்களுக்கு இசையமைத்து 2K கிட்ஸ்களை வைப்பில் வைத்தவர். பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்த மணிசர்மா தமிழில் விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

கே. பாலச்சந்தர் பார்த்து பார்த்து செதுக்கிய படம் : பிளாப் ஆகி மண்ணை கவ்வியதால் சோகத்தின் உச்சிக்குச் சென்ற இயக்குநர் சிகரம்

அதன்பிறகு மளமளவென தமிழில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்த மணிசர்மா இந்தி மற்றும் கன்னடப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மகேஷ்பாபு, ராம்சரண் போன்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

கடந்த 2022-ல் மட்டும் தொடர்ச்சியாக ஒரே ஆண்டில் 10 படங்களுக்கு இசையமைத்த மணி சர்மா அப்படியே எதிராக கடந்த வருடம் ஒரே ஒரு படத்திற்கு மட்டுமே இசையமைத்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறும் போது, “பெரும்பாலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் தமன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கே தங்கள் பட வாய்ப்பினைக் கொடுக்கிறார்கள். எனக்கும் ஒரு படம் தரலாம் அல்லவா“ என்று ஓப்பனாகக் கேட்க தற்போது ஆந்திர திரையுலகில் பேசு பொருளாகியுள்ளது.

தற்போது இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கும் மணிசர்மா போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இவ்வாறு கூறியிருப்பது சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. மேலும் வேற்று மொழியில் உருவான ஒரு பாடல் ஒன்றை அப்படியே காப்பியடித்து தான் ஒரு படத்திற்கு இசையமைக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், வேறு வழியின்றி அதை செய்தாகவும், ஒரு இசையமைப்பாளர் என்றால் தனித்துவ இசையை வழங்குவது தான் திறமை என்றும் அந்தப் பேட்டியில் மணி சர்மா கூறியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...