கே.பாலச்சந்தர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்… ஃப்ளாப் ஆகி மண்ணை கவ்வியதால் சோகத்தின் உச்சிக்குச் சென்ற இயக்குநர் சிகரம்!

வழக்கமான பாணியில் சினிமா எடுத்தவர்களுக்கு மத்தியில் தன்னுடைய படங்கள் ஒவ்வொன்றும் பேசப் பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து அதற்கேற்றாற் போல் கதைகளைச் செதுக்கி திரையில் வெற்றி கண்டவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்திர். அதனால்தான் தனது முதல்படமான நீர்க்குமிழியில் அப்போது காமெடியான நடித்துக் கொண்டிருந்த நாகேஷை கதாயநாயகனாக உயர்த்தி வெற்றி கண்டவர்.

அதனைத் தொடர்ந்து சமூகக் கருத்துள்ள குறிப்பாக பெண்கள் முன்னேற்றம், பிரச்சினைகளை அவர் திரைப்படத்தில் கையாண்ட விதம் வேறு எந்த இயக்குநரும் செய்தது கிடையாது. இதனால் தான் அவர் இயக்குநர்களின் சிகரமாகத் திகழ்கிறார். ஆனால் அப்பேற்பட்ட இயக்குநர் சிகரத்திற்கே தான் இரவுபகலாக செதுக்கிய திரைப்படம் ஒன்று பிளாப் ஆகி மண்ணைக் கவ்வியது. அந்தப் படம் தான் அக்னி சாட்சி.

குமுதம் இதழுக்காக நடிகர் சிவக்குமார் கே.பாலச்சந்தரைப் பேட்டி கண்ட சமயம் அது. அப்போது அக்னிசாட்சி படத்தைப் பற்றி கே.பி.யிடம் கேள்வி கேட்கும் போது, “உங்களுக்குப் பிடிச்ச படங்களில் ஒன்று அக்னிசாட்சி. நீங்கள் ரொம்பவும் ரசித்து இயக்கிய படம் அது. ஸ்கிரிப்ட் எல்லாம் அவ்வளவு பக்காவாக இருக்கும். நீங்கள் எந்த அளவுக்கு இன்வால்வ் ஆனீங்களோ அதே அளவுக்கு நானும் சரிதாவும் இன்வால்வ் ஆகி நடித்திருப்போம். டப்பிங் பேசுகையிலேயே எமோஷனல் தாங்காமல் நானும் அழுது சரிதாவும் அழுது….. ஒரு கட்டத்தில் சரிதா மயக்கம்போட்டே விழும் அளவுக்குப் போய் என்றெல்லாம் உழைத்துச் செய்த படம் அது! ஆனால் அந்தப் படம் தோல்வியடைஞ்சது எனும்போது உங்க உணர்வு எப்படி இருந்தது? என்று கேட்டார்.

அதற்கு கே.பாலச்சந்தர் சட்டென்று பதிலளிக்கும் போது, “தற்கொலை பண்ணிக்கலாம் என்று நினைத்தேன். உண்மையாகத்தான் சொல்றேன். இந்த உணர்வேதான் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இருந்தது. அந்த தாக்கத்திலிருந்து வெளிவர ரொம்ப நாள் பிடிச்சது எனக்கு“ என்று வெளிப்படையாக பதிலளித்தார்.

அக்னி சாட்சி திரைப்படம் 1982-ல் வெளியானது. இத்திரைப்படத்தில் சிவக்குமார், சரிதாவுடன் ரஜினி, கமல் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பர். சரிதாவிற்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றுக் கொடுத்தது. உளவியல் சார்ந்த படமான அக்னிசாட்சி தோல்விப் படமாகவே அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.