“எல்லாத்துக்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்” சிவகார்த்திகேயன் பற்றிய கேள்விக்கு பதிலடி கொடுத்த இமான்

அண்மையில் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும், அதை வெளியில் சொன்னால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் எனவும், இனி அவர் நடிக்கும் படங்களுக்கும் இசையமைக்கப் போவதில்லை என்றும் இசையமைப்பாளர் இமான் கூறியதையடுத்து சோஷியல் மீடியாவே பற்றி எரிந்தது. இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை என்பது தெளிவாகாத நிலையில் பல்வேறு வதந்திகள் உலா வந்தன.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் எந்த பதிலும் தராத நிலையில் தற்போது செய்தியாளர்களின் கேள்விக்கு டி.இமான் மீண்டும் ஒரு பதில் அளித்துள்ளார்.

வெளியான தங்கலான் டீசர் : பாம்பை இரண்டாகப் பிளந்து மிரள வைத்த சீயான் விக்ரம்

சிவகார்த்திகேயனின் ஆரம்பகால திரைப்படங்களில் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் இமான். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம்கொத்திப் பறவை, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலமாக பட்டிதொட்டியெங்கும் சிவகார்த்திகேயனை பிரபலப்படுத்தியது என்றால் அது இமானின் இசையில் வெளிவந்த பாடல்கள் எனலாம்.

இதனால் சிவகார்த்திகேயனுக்கும், இமானுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இதனையடுத்தே பல முன்னணி இயக்குநர்களின் லிஸ்ட்-ல் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் டி.இமானும் இசை, சமூக சேவை என பஸியாக இருக்கிறார்.

ஆனால் இருவர் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. இவர்களது நட்பில் தற்போது விரிசல் விழுந்துள்ளது. இமானின் முதல் மனைவி விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என செய்திகள் உலாவந்த நிலையில் அதுகுறித்து இருவருமே பதில் தரவில்லை. ஆனால் இமானின் முன்னாள் மனைவி மோனிகா பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.  அதில் சிவகார்த்திகேயன் எங்களை சேர்த்து வைக்க தான் வந்தார் என்றும், அவர் ஒரு ஜென்டில்மேன் என்றும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது என்று விளக்கம் கொடுத்து இருந்தார்.

Dimman wife

தமிழ்த்திரை உலகைக் கலக்க வருகிறது 2023 தீபாவளி ரிலீஸ் படங்கள்

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்றிற்கு இசையமைக்கும் டி.இமான் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு “எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி உண்டு. கடவுள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்” என்று தெரிவித்தார். இதனால் இவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி மீண்டும் திரையில் ஒன்றாக பயணிப்பார்கள் என்று தோன்றுகிறது.

ரசிகர்களும் மீண்டும் இவ்விருவர் காம்போவில் பாடல்களைக் கேட்கலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.