நான் சொன்னது அந்த அர்த்தம் இல்ல : ‘டாவு டாவு டாவுடா’ பாட்டுக்கு அர்த்தம் சொன்ன தேவா

தமிழ் சினிமாவில் இளையராஜாவின் காலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம் அது. எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் மற்றொரு பாணியில் கலக்கிக் கொண்டிருக்க தேனிசையாய் வந்து இசையை தென்றலாய் மாற்றியவர்தான் தேவா.

1989-ல் மனசுக்கேத்த மகராசா படம் மூலமாக அறிமுகமான தேனிசைத் தென்றல் தேவா தனது அடுத்த படமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் கவனிக்க வைத்தவர். இப்படம் இவருக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினைக் கொடுக்க தொடர்ந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

இசைஞானி ஒருபக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் ஒருபக்கம் என இசை சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்க தேவாவின் பாடல்கள் தனி ஆளுமையைக் கொண்டு ஹிட் அடித்தது.. அப்போது வளர்ந்து வந்த ஹீரோக்களான அஜீத், பிரசாந்த், விஜய், சரத்குமார் போன்றோருக்கு தேவாவின் இசையில் அமைந்த பாடல்கள் அவர்களை மிகுந்த பிரபலமடையச் செய்தது.

1995-க்குப் பிறகு தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகம் செய்தார். சென்னைத் தமிழில் இவர் இசையமைத்துப் பாடிய கானாப் பாடல்கள் ஏராளம். அத்தனை பாடல்களும் இன்றும் தேவாவின் கானங்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இவர் அமைத்த தீம் மீயூசிக்கை இன்றளவும் அவருக்கு டைட்டில் கார்டில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு கானா வடிவில் இசையை சாமானியக்கும் கொண்டு சென்ற தேவா பாடல்  ஒன்றுக்கு அர்த்தம் கூறியுள்ளார். காதலே நிம்மதி படத்தில் இடம்பெற்ற ‘விதவிதமா சோப்பு, சீப்பு, கண்ணாடி‘ என்ற கானா பாடல்.

கைதி படத்தின் பிரியாணி சீன் இப்படித்தான் யோசிச்சாங்களா? Secret சொன்ன லோகேஷ்

முரளி, சூர்யா இணைந்து நடித்த இப்படத்தின் அந்தப் பாடலில் தலைவாசல் விஜய் நடித்திருப்பார். குதிரை வண்டியில் சவாரி செய்து கொண்டே தனது முறைப்  பெண்ணை நினைத்து தலைவாசல் விஜய் பாடியது போல் வரும் அப்பாடலில் இடம்பெற்ற ‘டாவு டாவு டாவுடா, டாவுனாக்கு டையிடா‘ என்ற அடைமொழி வரும்.

அதற்கு அர்த்தம் சொன்ன தேவா, ‘டாவு‘ என்றால் காதல் காதல், காதல், காதல்டா காதல் இல்லைன்னா சாதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அர்த்தமல்ல. ‘காதல் காதல், காதல்டா காதல் இல்லைன்னா டையிடா (முடிக்கு அடிக்கும் டை)‘ என்று அப்பாடலில் குறிப்பிட்டுள்ளதாக இசை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews