கைதி படத்தின் பிரியாணி சீன் இப்படித்தான் யோசிச்சாங்களா? Secret சொன்ன லோகேஷ்

மாநகரம் படத்திற்கு பிறகு பல்வேறு நடிகர்களிடம் தனது அடுத்த படத்திற்கான கதையைக் கூறிய நிலையில் கைதி படத்தின் கதைக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறார் கார்த்தி. பெரும்பாலும் டைரக்டர்களுக்கு திருப்பு முனையாக படங்கள் கொடுப்பதில் கார்த்தி கைராசிக்காரர். அந்தவகையில் பா.ரஞ்சித்துக்கு மெட்ராஸ், ஹெச். வினோத்துக்கு தீரன் அதிகாரம் ஒன்று, சுசீந்திரனுக்கு நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து இயக்குநர்களின் நடிகராகத் திகழ்கிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜுக்கு கார்த்தியால் கைகூடிய படம் தான் கைதி. பாடல்களே இல்லாமல், இருட்டு பின்னணியில் Dark Theme-ல் எடுக்கப்பட்ட கைதி படம் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் லோகேஷ் கனகராஜின் திறமையை நிரூபித்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அந்தப்படத்தின் சீக்ரெட் ஒன்றை சமீபத்தில் நடந்த ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் பகிர்ந்துள்ளார்.

கைதி படத்தில் வரும் பிரியாணி சீன் அது. இன்றும் ஏதேனும் ஹோட்டல்களின் உணவுத் திருவிழா என்றாலோ, ஹோட்டல்களின் பெயர் பலகைகளிலோ கார்த்தி பிரியாணி சாப்பிடுவது போல் அமைந்த சீனின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். படத்தில் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வரும் கார்த்தி அந்தக்  காட்சியில் பிரியாணியை வெளுத்துக் கட்டியிருக்கும் சீனில் நடித்திருப்பார்.

இந்திக்குச் செல்லும் ‘என்னை அறிந்தால்‘ : சத்தியதேவ் ஆக நடிக்க இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

கைதி படத்தில் அந்தக் காட்சிக்கு முதலில் பிரியாணிக்குப் பதிலாக வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பது போன்ற காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டார்களாம். ஆனால் அகோர பசியில் ஜெயிலில் இருந்து வரும் ஒருவர் 20 பேர் மயங்கிக் கிடந்தாலும், எதைப் பற்றியும் யோசிக்காமல் பசியாறுவது போல் காட்சியை வைக்கலாம் என லோகேஷ் கூற கார்த்தியும் ஓகே சொல்லியிருக்கிறார். அதன்படி முதலில் தண்ணீர் குடிக்கச் செல்லும் கார்த்தி பிரியாணியைக் கண்டதும், அண்டா மூடியில் பிரியாணியை வைத்து வெளுத்துக் கட்டும் காட்சியில் அசத்தியிருப்பார்.

தியேட்டர்களில் கைதட்டல் வாங்கிய இந்தக் காட்சியை படமாக்கியதில் லோகேஷ் மிரட்டியிருப்பார். கையில் விலங்குடன் கார்த்தி பிரியாணியை நுகர்ந்து ரசித்துச் சாப்பிடுவார். இன்றும் பல இடங்களில் பிரியாணி என்றாலே கைதி படத்தின் கார்த்தி பிரியாணி சாப்பிடும் போஸ்டரே முதலில் நினைவுக்கு வரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews