நடிக்க வந்த நேரத்தில் இப்படி எல்லாமா செய்தார் எம்.எஸ்.வி..? ஆனா அதுதான் அவரோட புகழுக்கே காரணம்…!

மெல்லிசை மன்னர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவரது இசையில் அனைத்துப் பாடல்களுமே அருமையானவை. இவரது நடிப்பு நம்மை சிரிக்க வைத்து விடும்.

காதல் மன்னன் படத்தில் தல அஜீத் உடன் இணைந்து நடித்திருப்பார். ஒருமுறை இவரிடம் நிருபர் ஒருவர், உண்மையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் திரையுலகிற்கு வந்தீர்களா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு எம்.எஸ்.வி. சொன்ன பதில் இதுதான்…

சின்ன வயசுல என் குருநாதர் நீலகண்ட பாகவதர்கிட்ட பாட்டுப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அவர் நாடகங்களும் எழுதுவார். அந்த சமயத்துல கேரளா கண்ணூர்ல சிறைக்கைதிகளோட பொழுதுபோக்குக்காக நாடகம் போடுவாங்க.

அப்படிப் போட்ட ஒரு நாடகம் தான் ஹரிச்சந்திரா. அதுல என்னை லோகிதாசன் நடிக்க வச்சாரு. அதைப் பார்த்த மாவட்ட கலெக்டர் இந்தப் பையன் சினிமாவுல சேர்ந்தா பிரமாதமா வருவான்னு சொன்னாரு. அதைக் கேட்டதுல இருந்து எனக்கு சினிமா கிறுக்குப் பிடிச்சிருச்சு என்கிறார்.

அதன்பிறகு இப்படி தொடர்கிறார்.

Kathal Mannan
Kathal Mannan

எப்படியவாது சினிமாவுல சேர்ந்துடணும்னு முடிவு பண்ணினேன். அப்புறம் மாமா மூலமா திருப்பூர் ஜூபிடர் பிக்சர்ஸ்ல ஆபீஸ் பாயா சேர்ந்தேன். அங்கே கண்ணகி பட வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தது. அதில பாலமுருகன் வேஷம் எனக்கு.

அப்புறமா குபேர குசலா படத்துல வாய்ப்பு கிடைச்சது. ஆபீஸ் பையனா வேலை பார்க்கிறப்ப ஸ்டூடியோவுல ஆர்மோனியப் பெட்டியைத் துடைக்கிற சாக்குல அதை ஆசையா தடவி தடவிப் பார்ப்பேன். அப்ப தான் டி.எஸ்.பாலையாவோட பழக்கம் வந்தது. அவரோட நாடகக்குழுவுல சேர்த்துக்கிட்டாரு. சின்ன சின்ன வேஷங்கள்ல நடிச்சேன். கொஞ்ச நாள்ல அவரும் சினிமாவுல பிசியாகிட்டாரு.

நாடகங்கள் கிடைக்கல. வறுமையில ரொம்பக் கஷ்டப்பட்டேன். மறுபடியும் ஜூபிடர் பிக்சர்ஸ்க்கே போனேன். அங்கே இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடுவை சந்திச்சேன். தன்னோட உதவியாளரா சேர்த்துக்கிட்டாரு.

அப்புறம் இசை மட்டும் தான்னு முடிவு செஞ்சேன். பிற்காலத்துல சினிமாவுல நடிக்க சில நண்பர்கள் மூலமா வாய்ப்புகள் கெடைச்சது. அவ்ளோதான்… என்கிறார், இசை மேதை எம்.எஸ்.வி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.