ஹீரோவை விட வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்கள் ஒரு பார்வை!

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை திரைப்படங்களின் கதைகள் ஹீரோவை மையப்படுத்தி அமைந்திருக்கும். முன்னணி ஹீரோக்கள் நடிப்பிற்காக வெற்றி விழா கண்ட பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் உள்ளது. இந்த அளவிற்கு படங்களில் ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும், அதை சார்ந்து ஹீரோயின்கள், வில்லன்கள், காமெடியன்கள் என மற்ற கதாபாத்திரங்கள் படத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் சில திரைப்படங்களில் வில்லன்களை நாம் மறக்கவே முடியாது. ஹீரோக்களுடன் சண்டை போடும் வில்லன்களை பார்த்து கோவம் அடையாத ரசிகர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அந்த வில்லன் கதாபாத்திரம் நம் மனதில் நெருக்கமாக இணைந்து விடும். இப்படி இருக்க சில திரைப்படங்களில் ஹீரோக்களை விட வில்லன் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து, அந்தப் படங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து வெற்றி திரைப்படங்களாக மாறி உள்ளது.

இந்நிலையில் ஹீரோக்களை விட வில்லன்கள் அதிகம் பிரபலம் அடைந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதல் திரைப்படம் 16 வயதினிலே. பாரதிராஜா இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் தான் 16 வயதினிலே. இந்த படத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வெகுளியான சப்பாணி கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும் அவரை எரிச்சல் ஊட்டும் விதமாக கிண்டல் செய்யும் பரட்டை கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார் ரஜினி. இவர்கள் இருவரின் கூட்டணியில் இடம் பெற்ற இப்படம் மாபெரும் சீட் கொடுத்தது.

இரண்டாவது திரைப்படம் முதல்வன். சங்கர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட படம் தான் முதல்வன். படத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் முதல்வராக ரகுவரன் நடிக்க பத்திரிக்கையாளராக அர்ஜுன் நடித்திருப்பார். இந்த படம் முழுக்க ரகுவரன் கூறும் ஒவ்வொரு வசனங்களும் வில்லத்தனம் நிறைந்து படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கும்.

மூன்றாவது திரைப்படம் மாஸ்டர். 2021 இல் லோகேஷ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் மாஸ்டர். இப்படத்தில் மூர்க்கத்தனமான பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பு இடம் பெற்று இருக்கும். ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக தரமாக கலக்கியிருப்பார். எதிர்பாக்காத வில்லத்தனத்தை விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் வெளிப்படுத்தி இருக்கும்.

விடாமுயற்சி படத்தில் திரிஷாவுக்கும் போட்டியாக களமிறங்கும் அடுத்தடுத்த இரண்டு ஹீரோயின்கள்!

நான்காவது திரைப்படம் தனி ஒருவன். 2001 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் தனி ஒருவன் இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தில் ஹீரோவுக்கு கொடுக்கக்கூடிய பில்டப்பை போல வில்லனுக்கு கொடுத்திருப்பார்கள். பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார் அரவிந்த்சாமி.

ஐந்தாவது நாம் பார்க்கும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மாநாடு. படத்தில் சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் டைம் லூப்பை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இந்தத் திரைப்படம் நடிகர் சிலம்பரசனுக்கு கம்பேக் கொடுத்த திரைப்படம். மேலும் போலீஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு மற்றும் ரிப்பீட் டயலாக் படத்திற்கு மாஸான வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...