விடாமுயற்சி படத்தில் திரிஷாவுக்கும் போட்டியாக களமிறங்கும் அடுத்தடுத்த இரண்டு ஹீரோயின்கள்!

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துபாய்க்கு அருகில் உள்ள அஜர்பைஜானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படபிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. அங்கு முதலில் நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷா இடையே ஆன காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தில் வயதான அஜித் கதாபாத்திரத்திற்கு திரிஷா ஜோடியாக நடிக்க உள்ளார். மற்றொரு அஜித் கதாபாத்திரத்திற்கு ஹியுமா குரோஷி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த இரண்டாவது கதாநாயகிக்கு படத்தின் அதிரடி காட்சிகள் உட்பட சில கிளாமர் காட்சிகள் இருப்பதால் இளமையான ஹீரோயின் வேண்டும் என படக்குழு நினைத்து தற்பொழுது இளம் ஹீரோயின் ரெஜினா அவர்களை படத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக இருந்துள்ளார். தற்பொழுது அவரது பணிகளை அவர் மகன் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ், நடிகர் அர்ஜுன் மற்றும் பிரபல நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளனர்.

மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பான்மையான அளவு வெளிநாடுகளில் மட்டுமே படமாக உள்ளதாகவும் மீதியுள்ள படப்பிடிப்புகள் சென்னையில் நடத்த உள்ளதாக தகவல் கிடைக்கின்றது. அடுத்தடுத்து வெளியாகும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்களால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் ஆக படத்தில் இணைந்துள்ள ஹீரோயின் திரிஷா, ரெஜினாவை தொடர்ந்து இந்த படத்தில் மற்றொரு ஹீரோயின் நடிக்கவுள்ளதாக மாஸ் அப்டேட் இன்று வெளியாகி உள்ளது.

கவலை மறந்து சிரிக்க வேண்டுமா.. நாகேஷின் இந்த 7 திரைப்படங்கள் போதும்!

இந்த படத்தில் சமீபத்தில் வெளியான தனுஷின் வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா மேனன் கதாநாயகியாக இணையுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தொடர்ந்து மலையாள படங்களிலும் சம்யுக்தா நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஒரு கதாநாயகியாக இணைய உள்ளதாகவும் சில இடங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளி துறையில் ஹீரோயினாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் இணைந்தால் படத்தின் விறுவிறுப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் புறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு காஸ்டியூம் டிசைனராக இயக்குனர் விஷ்ணு வரதனின் மனைவி அனுவரதன் முடிவு செய்யப்பட்டுள்ளதால் மிக ஸ்டைலிஸான அஜித்தை பார்க்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews