இந்தியாவில் சக்கை போடு போடும் Motorola Edge 40: விலை மற்றும் சிறப்பம்சங்கள்..!

Motorola நிறுவனத்தின் ஒவ்வொரு மாடல்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும் போதும் இந்திய பயனர்கள் அதற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுப்பார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான Motorola நிறுவனத்தின் புதிய படைப்பான Motorola Edge 40 என்ற ஸ்மார்ட் போன் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

இந்தியாவில் Motorola Edge 40 ரூ.29,999 என்ற விலையில் அறிமுகமாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது.

Motorola Edge 40 ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் இதோ:

* 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5-இன்ச் OLED டிஸ்ப்ளே
* MediaTek Dimensity 8020 பிராஸசர்
* 8 ஜிபி ரேம்
* 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 50MP பிரதான கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா, 2MP டெப்த் சென்சார் கேமிரா
* 32 எம்.பி செல்பி கேமிரா
* 4400mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Motorola Edge 40 ஸ்மார்ட்போன் நேர்த்தியான வடிவமைப்பு, சக்திவாய்ந்த பிராஸசர்மற்றும் சிறப்பாக கேமரா ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்தியாவில் Motorola Edge 40 ஸ்மார்ட்போனின் போட்டியாளரான OnePlus 11R, POCO F5 மற்றும் Realme 11 Pro Plus ஆகியவைவிட சிறப்பானது என கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews