மிஸ் யுனிவர்ஸ் பட்டம்.. 3 காதல்.. 47 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் சுஷ்மிதா சென்..!

மிஸ் யுனிவர்ஸ் என்ற உலக அழகி பட்டத்தை கடந்த 1994-ம் ஆண்டு பெற்ற நடிகை சுஷ்மிதா சென் மூன்று நபர்களுடன் காதல் கொண்டதாகவும் ஆனால் மூன்று காதலுமே தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது அவருக்கு 47 வயதாகியும் அவர் திருமணம் ஆகாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1994-ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற பின் திரை உலகமே அவரை திரும்பி பார்த்தது. முதலில் இந்தி படத்தில் அறிமுகமான அவர் இரண்டாவது படமே தமிழில் உருவான ரட்சகன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தமிழில் அவர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் திரைப்படத்தில் ஷக்கலக்க பேபி என்ற ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடினார். அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை.

ஹீரோவாக நடித்து வில்லனாக மாறிய சுமன்.. 10 மொழிகள்.. 700 படங்கள் நடித்து சாதனை..!

ரட்சகன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு தமிழில் ஒரு சில வாய்ப்புகள் வந்தது. ஆனால் ஹிந்தியில் அவர் பிஸியாக இருந்ததால் தமிழ் உள்பட தென்னிந்திய படங்களில் அவர் நடிக்க விரும்பவில்லை. ஹிந்தியில் அவர் 2000-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை அதிக படங்களில் நடித்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பல படங்களில் ஹீரோயினாக நடித்த சுஷ்மிதா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். குறிப்பாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ஆர்யா என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் நடிகை சுஷ்மிதா சென் கடந்த 2004-ம் ஆண்டு பிரபல நடிகை பாலிவுட் நடிகர் ஒருவருடன் காதலில் இருந்தார் என்றும், இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு திடீரென இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது.

விஜயகாந்த் உடன் நதியா நடித்த ஒரே படம்.. பாலிவுட் இசையமைப்பாளர்.. வெளிநாட்டு படப்பிடிப்பு என பிரமாண்டம்..!

அதன் பிறகு 2018-ம் ஆண்டு அவர் இன்னொரு நடிகருடன் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து 2022-ம் ஆண்டு அவர் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் டேட்டிங்கில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் மூன்று காதலுமே வெற்றி பெறாமல் அவர் திருமணமே செய்யாமல் தற்போது வரை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 47 வயதாகும் சுஷ்மிதா சென் இனிமேல் திருமணம் குறித்து தான் நினைத்து பார்க்க போவதில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சுஷ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளத்து வருகிறார். 2000-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்த அவர், அதன் பிறகு 2010-ம் ஆண்டு மீண்டும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார்.

ஒரு கட்டத்தில் சுஷ்மிதா தனது வளர்ப்பு குழந்தைகளிடம் நான் திருமணம் செய்து கொள்ளட்டுமா? உங்களுக்கு ஒரு அப்பா வேண்டாமா என்று கேட்டபோது எங்களுக்கு அப்பா தேவை இல்லை, நீங்கள் மட்டும் போதும், நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறியதாகவும் அதனை அடுத்து அவர் தனது திருமண திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்பட்டது.

என்னுடைய குழந்தைகள் தந்தை இல்லை என்பது குறித்து கவலை கொள்வதே இல்லை, ஆனால் அதே நேரத்தில் அந்த குழந்தைகளுக்கு தாத்தாவாக என்னுடைய அப்பா இருக்கிறார், அவர் மிகுந்த கவனத்துடன் அவர்களை கவனித்துக் கொள்வார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

2500 நாடகங்கள்.. 250க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.. இயல்பான நடிப்பில் அசத்திய பசி சத்யா..!

நடிகை சுஷ்மிதா சென் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் பலமாகவும் வைத்திருங்கள். அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும் போது உங்களுக்கு துணையாக இருக்கும், எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர், உங்களுக்கு மிகவும் பலமான இதயம் இருக்கிறது என்று தெரிவித்ததாக கூறினார். மேலும் தான் நலமாக இருப்பதாகவும் தனது நீண்ட வாழ்க்கைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews