எம்.எஸ்.வியை கோவப்படுத்திய எம்.ஜி.ஆர்! என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பொதுவாக அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் மியூசிக் டைரக்டருக்கும் ஹீரோவுக்கும் இடையே நெருக்கமான ஒரு உறவு இருக்கும். பெரும்பாலான திரைப்படங்கள் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்களாக அமைய அதுவே ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் அந்த காலத்தில் நடிகர் எம்ஜிஆருக்கும் இசையமைப்பாளர் எம்எஸ்விக்கும் இடையில் நடந்த சின்ன சண்டை குறித்த சுவாரஸ்யமான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவை பொறுத்த அளவில் ஆகச்சிறந்த இசை கலைஞர்களின் முக்கியமானவர் எம்எஸ் விஸ்வநாதன். அவர் பாடல்கள் இன்று கேட்டாலும் தேனாக இனிக்கக் கூடியது என்பதற்கு மாற்று கருத்துக்கள் கிடையாது. அவர் இசையமைத்த மெட்டுக்கு இணையாக இன்று வரை எந்த இசை கலைஞர்களாலும் இசையமைக்க முடியவில்லை என்பது அழிக்க முடியாத உண்மை. இதெல்லாம் ஒருபுறம் இருக்க எம்.எஸ்.வியின் பாடல்களை குறை சொல்லியுள்ளார் எம்ஜிஆர்.

1974 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இன்று நேற்று நாளை. இந்தத் திரைப்படம் நடிகர் அசோகன் இயக்கத்தில் நீலகண்டன் தயாரிப்பில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் எம்ஜிஆர் ஹீரோவாகவும், மஞ்சுளா ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருந்துள்ளார். எம்ஜிஆர் திரையுலகில் மிகவும் பிரபலமடைந்து பிசியாக வலம் வந்தது போல் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களும் திரையுலகில் மிகவும் பிரபலமடைந்த இசையமைப்பாளராக பிசியாக வலம் வந்துள்ளார்.

மேலும் அந்த காலத்தில் ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் இசையமைக்கப்பட்ட பின்பே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். அதனால் நேற்று இன்று நாளை படத்தில் பாடல் டியூன்களை எம்.எஸ்.வி இடம் இருந்து பெற்ற பின்பு அசோகன் அவர்கள் எம்ஜிஆரை சந்தித்து படப்பிடிப்பு குறித்து பேச நினைத்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.எஸ்.வி யின் டியூன் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி படத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். எம்.ஜி.ஆர் அதற்கு அடுத்ததாக ஒரு பாடலின் டியூனில் மட்டும் பல மாற்றங்களையும் செய்து வந்துள்ளார்.

முதல் படத்திலேயே சிவாஜியுடன் நடித்த பார்த்திபன்! சிவாஜி சொன்ன அந்த ஒரு வார்த்தை…

அடுத்தடுத்து எம்.ஜி.ஆர் செய்த மாற்றங்களால் எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் கோபமடைந்து நடிகர் அசோகனை அழைத்து நான் இந்த படத்திற்கு இசையமைக்கவில்லை வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி விலகி உள்ளார். இதை அறிந்து எம்ஜிஆர் உடனே எம்.எஸ். வி அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

அப்போது நீங்கள் இசையமைத்த டியூனில் எந்த குறையும் இல்லை. பாடல்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது. ஆனால் நான் அதற்கு சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். நான் வேறு படங்களில் தற்போது பிசியாக இருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறேன். அதை நேரடியாக அசோகனிடம் சொல்லாமல் பாடல் சரியில்லை என்று நாட்களை கடத்தி வருவதாகவும் அதனால் உங்கள் பாடல் சரியில்லை என்ற காரணத்தை கூறியதாகவும் எம்ஜிஆர் விளையாட்டாக கூறியுள்ளார். அதற்கு எம்எஸ்வி அவர்களும் உங்கள் கால்சிட் பிரச்சினையால் பாடல் சரியில்லை என்று கூறியதை நினைத்து சிரித்து விட்டாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...