ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்

நாடக நடிகராக தனது வாழ்க்கையினைத் தொடங்கி படிப்படியாக தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் பின்னர் நாடே போற்றும் அளவிற்கு மாமனிதராக உயர்ந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 1936-ல் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் முதன்முதலாகத் சினிமாவில் கால் பதித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தவருக்கு ராஜகுமாரி என்ற படத்தில் முதன்மை ஹீரோவாக நடித்தார்.

அதற்கடுத்து திரையில் சுமார் 25 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் ராஜ்ஜியம் தான். சிவாஜி ஒருபக்கம் நடிப்பில் கலக்க எம்.ஜி.ஆரோ புரட்சிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாது மக்களையே தன் பக்கம் ஈர்த்தார்.

தனக்கு முதன்முதலாக பெரும்புகழையும், அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த ராஜகுமாரி திரைப்படத்தின் ஒரு காட்சிக்காக எம்.ஜி.ஆர். தனது உயிரையே பணயம் வைத்து நடித்திருக்கிறார்.

ராஜகுமாரி கதைப்படி சிறையில் இருக்கும் ஒருவன் வாழ்க்கையே வெறுத்து அங்குள்ள தூக்குமேடையில் தூக்கிட்டுக் கொள்ள முயல்வதாக ஒரு காட்சி. அப்போது பாரம் தாங்காமல் உத்தரம் கீழே விழும்படி காட்சிக்கான செட் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் தூக்கில் தொங்குவது போல் நடிக்க அவர் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு திடீரென்று மேல்நோக்கி இழுக்க ஆரம்பித்திருக்கிறது.

சமுத்திரக்கனி-யோகிபாபு கூட்டணியில் ‘யாவரும் வல்லவரே’… இந்த வாரம் ரிலீஸ்…

ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று உணர்ந்த படக்குழு அதிர்ச்சியாயிருக்கிறது. கயிறு கழுத்தினை மேலும் இறுக்க ஒருவினாடி அவரின் சப்த நாடியும் அடங்கியிருக்கிறது பின்னர் பாரம் தாங்காமல் உத்தரம் கீழே விழ அவரின் முதுகில் மளமளவென கட்டைகள் விழுந்தன.

அப்போதும் எதையும் கண்டுகொள்ளாத எம்.ஜி.ஆர். தான் நடிப்பதற்குத் தகுதியற்றவன் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாது இப்படி ஓர் காட்சியில் நடித்து தான் சிறந்த நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

அப்போது எம்.ஜி.ஆரை ஆசுவாசப் படுத்தி தேற்றியவர் வேறுயாருமல்ல அவருடன் பல படங்களில் வில்லத்தனம் செய்து ரசிகர்களை மிரட்டிய எம்.என். நம்பியார் தான். இப்படித் தொடங்கிய இவர்களின் நட்பு திரையில் எம்.ஜி.ஆரின் இறுதிப் படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரை திரையில் வில்லனாகத் தொடர்ந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...