ரஜினியின் 100-வது படத்துக்கு வந்த சிக்கல்.. எஸ்.பி.முத்துராமன் கேட்ட அந்த 3 கேள்வி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 100-வது படம் ஸ்ரீ ராகவேந்திரா என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய இஷ்ட தெய்வமான மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்க விரும்பி அதனை தனது 100-வது படமாக வெளியிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் 100-வது பட அறிவிப்பும் வெளியானது. படத்திற்குத் தலைப்பு ஸ்ரீ ராகவேந்திரர் என்றும், கவிதாலயாவின் தயாரிப்பு என்றும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பைப் பார்த்து முதலில் ஷாக் ஆனவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தான். ஏனெனில் ரஜினியிடம் மூன்று கேள்விகளை முன்வைத்திருக்கிறார். ஒன்று நீங்கள் கமர்ஷியல் ஹீரோ. சாதுவாக, மகானாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இரண்டாம் கேள்வி இந்தப் படத்தில் லாபத்தினை எதிர்பார்க்க முடியுமா? நஷ்டம் வந்தால் நம் பாலச்சந்த்ர் சார் பாதிக்கப்படுவார்.

மூன்றாவது கேள்வி நான் சுயமரியாதைக் குடும்பப் பின்னனியைக் கொண்டவன். கடவுள் பக்தி கிடையாது என்னை எப்படி இந்தக் கதையை இயக்கத் தேர்ந்தெடுத்தீர்கள் என மூன்று கேள்விகளை முன்வைத்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டார் ரஜினி. மறுநாள் கே.பாலச்சந்தர் அலுவலகத்திலிருந்து அவரை வரச் சொல்லி அழைப்பு. அப்போது இருவரும் பேசிக் கொள்ளும் போது, ரஜினியிடம் மூன்று கேள்விகளைக் கேட்டீர்களாமே.  அதற்கு நான் பதில் கூறுகிறேன்.

முதல் கேள்வி ரஜினிகாந்த் சாதுவாக நடித்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். அவரது ரசிகனுக்கு அது பிடிக்கும். அவருக்காக தங்களது உயிரையே கொடுக்கத் தயாரா இருக்காங்க. ரஜினி ராகவேந்திரராக நடிச்சா மெய்மறந்து வரவேற்பாங்க. என்றார்.

ஷூட்டிங் ஸ்பாட்ல் சாப்பிடும் போது விஜயகாந்த் செய்யும் செயல்.. இதுனாலதான் மக்கள் மனசுல குடியிருக்காரு..!

இரண்டாவது கேள்வியான நஷ்டம் ஏற்படும் என்பதற்கு ரஜினி நம்ம கம்பெனியில் ராகேவேந்திரராக நடிப்பதே பெரிய புண்ணியம். எனவே எனக்கு லாபம் வந்தாச்சு. மூன்றாவது கேள்வியாக சுயமரியாதைக் குடும்பம் என்றிருக்கிறாய். நீ பலதரப்பட்ட கதைகளையும் இயக்கி வெற்றி கண்டவர். மேலும் நீ எந்த ஸ்கிரிப்டையும் வீணாக்கமாட்டாய். உன்னால் முடியும்.. நீயே இயக்கு நான் உறுதுணையாக இருக்கிறேன் என்று எஸ்.பி. முத்துராமனைச் சம்மதிக்க வைத்து ஸ்ரீராகவேந்திரர் படத்தினை எடுக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர்.

எஸ்.பி.முத்துராமனும் புராணப் படங்கள், பக்திப்பட இயக்குநரான ஏ.பி. நாகராஜனின் பார்முலாவை பாடமாக மாற்றி ஸ்ரீராகவேந்திரா படத்தினை இயக்கி வெற்றியைக் கொடுத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews