பழைய பகைய மனசுல வெச்சு.. லவ் டுடே படத்தில் தாக்கிய பிரதீப்.. பதிலுக்கு பார்த்திபன் செஞ்ச விஷயம் இருக்கே..

ஒரு சில திரைப்படங்களை இயக்கி நடித்து இளைஞர்கள் மத்தியில் அதிக பெயர் எடுத்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். மிகவும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து குறும்படங்களாக செய்து பிரபலமான பிரதீப் ரங்கநாதனுக்கு கோமாளி என்ற திரைப்படம், தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தை அறிமுகம் செய்து வைத்திருந்தது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம், அந்த ஆண்டின் சிறந்த பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் மாறி இருந்தது. சுமார் 20 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் ஒருவன் திரும்ப வரும் போது இந்த உலகம் அவனுக்கு எந்த அளவு புதிதாக இருக்கிறது என்பதை மிக மிக காமெடியாக அதே வேளையில், படத்தின் இறுதி காட்சியில் மனித நேயம் தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதையும் மிக உணர்வுபூர்வமாக கோமாளி எடுத்து சொல்லி இருக்கும்.

முதல் படமே பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பெரிய ஹிட்டாக அமைய, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்கியதுடன் மட்டுமில்லாமல், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு பெரிய அளவில் வெற்றி படமாக லவ் டுடே அமைந்ததுதான் மட்டுமில்லாமல், அறிமுக நடிகராக ஏறக்குறைய 100 கோடி கலெக்ஷனையும் அள்ளி யாருப்பா இந்த பையன் என பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.

இப்படி பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான 2 திரைப்படங்களும் கமர்சியல் ரீதியாக பெரிய வெற்றி படமாக அமைய, அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் நடிகராகவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிரதீப் ரங்கநாதன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றிலும், அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

இதனிடையே, லவ் டுடே படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனை தாக்கி, பிரதீப் ரங்கநாதன் வைத்த வசனமும், அதற்கு அவர் சொன்ன பதிலடியும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ‘பக்காவா இருந்த பையனை பார்த்திபனை மாதிரி பேச வெச்சுட்டே’ என அவரை பைத்தியம் என குறிப்பிட்டு வசனம் ஒன்றை வைத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

இது பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “முதலில் நானும் அனைவரையும் போல அந்த காட்சிக்கு சிரித்து விட்டேன். பின்பு தான் அதில் ஒரு குத்தல் இருப்பது தெரிந்தது. இதற்கு காரணம், என்னுடைய அசோசியேட் இயக்குனர் ஒருவர் உருவாக்கிய கதை, கோமாளி படத்துடையது என ஒரு பிரச்சனை உருவாகி, பாக்யராஜ் முன்னிலையில் அது சமரசம் செய்யப்பட்டு பணமும் கிடைத்தது.

இப்படி கோமாளி படத்தின் பிரச்சனையை மனதில் வைத்து என்றாவது ஒரு நாள் பழி வாங்கி விடலாம் என்ற முயற்சி தான் அது. லவ் டுடே படம் பிடித்ததாக பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தேன். பல மேடைகளிலும் கூட லவ் டுடே படத்தை பாராட்டி பேசி இருந்தேன். அது தான் எனது மெச்சுயூரிட்டி. பிரதீப் ரங்கநாதனுக்கு அந்த முதிர்ச்சி ஒரு நாள் வந்து விடும்” என பார்த்திபன் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews